விண்ணப்பித்தவர்கள் எதிர்பார்ப்பு... "மை' வைக்க முடியுமா? பட்டியலில் இடம் பெற வாய்ப்பு !


        வாக்காளர் சேர்க்கை விண்ணப்பம் அளித்தவர்களின், விவரங்களை, கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


       இதனால், பட்டியலில் சேர்க்க வாய்ப்புள்ளதாக, தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில், ஒன்பது லட்சத்து,
75 ஆயிரத்து, 781 ஆண்கள்; ஒன்பது லட்சத்து, 69 ஆயிரத்து, 272 பெண்கள்; 192 திருநங்கையர் என, 19 லட்சத்து, 45 ஆயிரத்து, 245 வாக்காளர் உள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில் பயன்படுத்தி வாக்காளர் பட்டியல் அடிப் படையில், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அதன்பின், 1ம் தேதி வெளியான வரைவு பட்டியலில் புதிய வாக் காளர்களுக்கு, இணைப்பு பட்டியல்-1 தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் கமிஷன் நடத்தி வரும், வாக்காளர் சிறப்பு முகாம் வாயிலாக, இதுவரை, 55 ஆயிரத்துக்
கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில், 18 வயது பூர்த்தியாகதவர் நீங்கலாக, மற்றவர்கள் உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்
பளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
வழக்கமாக, உள் ளாட்சி தேர்தல் அறிவித்தால், வேட்புமனு தாக்கல் முடியும்வரை, பெயர் சேர்க்க வாய்ப்பு வழங்கப்படும். இம்முறை தெளிவான அறிவிப்பு இல்லா ததால், வாக்காளர்கள் குழப்பமடைந்துள்ளனர். இச்சூழலில், 1ம் தேதி முதல், 23 வரை, பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளவர் விவரத்தை பெற்று, தகுதியானவர் பெயர்களை இணைத்து, உள்ளாட்சி தேர்தலுக்கான துணை பட்டியல் தயாரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, 23ம் தேதி வரை விண்ணப்பித்தவர் பெயர்களை, கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி, இரவு, பகலாக நடந்து வருகிறது. இந்திய தேர்தல் கமிஷனில் இருந்து உத்தரவு கிடைத்ததும், தகுதியான வாக்காளர் விவரம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒப்படைக்கப்பட்டு, துணை பட்டியல்-2 தயாரிக்கப்படும்.
இதுவரை, 23ம் தேதி வரை விண்ணப்பித்தோர் விவரங்களை தயார்படுத்த மட்டும் உத்தரவு வெளியாகியுள்ளது. துணை பட்டியல் தயாரிப்பு குறித்து முறையான அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. இது குறித்து உள்ளாட்சி அமைப்புகளின், தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டபோது, "18வயது பூர்த்தியான, இடமாறிய வாக் காளரை பெயர் சேர்ப்பது குறித்து இறுதியான உத் தரவு கிடைக்கவில்லை.
இருப்பினும், இந்திய தேர்தல் கமிஷன், 23ம் தேதி வரை விண்ணப்பித்தோர் விவரத்தை தொகுத்துள்ளதால், புதிய வாக்காளரை இணைக்க அதிக வாய்ப்புள்ளது. வாக்காளர் பதிவு அலு வலர், அவ்விவரத்தை வழங்கினால், ஒரே நாளில் உள்ளாட்சி தேர்தலுக்கான துணை பட்டியல்-2 தயாரிக்க முடியும்,' என்றனர்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank