உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க மூன்று வகையான வாய்ப்புகள்
உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க, மூன்று வகையான வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவு: உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் செப்.,19ல் வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், தாலுகா அலுவலகங்கள், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்குவைக்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்குபின் செப்.,26ல் வாக்காளர் துணை பட்டியல் வெளியிடப் படுகிறது. இதில் சேர்க்கப்பட்டவர்களும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியும்.
மேலும், கடந்த சட்டசபை தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் ஆர்.டி.ஓ., அலுவலகங் களுக்கு செல்ல வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பித்தால் போதும். பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் பெயர் வார்டு மாறி இடம்பெற்றிருந்தாலும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் பிரிவு அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம். புதிதாக பெயர் சேர்ப்பவர்கள் மட்டும் ஆர்.டி.ஓ., மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.