ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி : அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி


         ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும் என்று துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி அறிவித்தார்.

          சட்டப்பேரவையில் புதன்கிழமை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின ஓட்டுநர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றிடவும், திறன்களை வளர்த்துக் கொள்ளவும், உரிமம் பெற்றுள்ள 960 ஓட்டுநர்களுக்கு மோட்டார் வாகனப் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக தாட்கோ சிறப்பு மையத் திட்டம் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து ரூ.1.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியினர் பாரம்பரிய வேளாண்மை தொழிலைத் தொடரும் வகையில், அங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலையைப் பதப்படுத்த, கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள கோழித்துறையில் பசுந்தேயிலை தயாரிக்கும் இயந்திர அலகு அமைக்கப்படும். இந்தத் திட்டத்துக்கு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.80 லட்சம் ஒதுக்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் தங்களை தகுதிப்படுத்திக் கொள்வதற்காக, 10,299 மாணவர்களுக்கு 11 மாதங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். இந்தத் திட்டத்துக்காக, மத்திய சிறப்புத் திட்ட நிதியிலிருந்து ரூ.34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார் அவர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)