இ - சேவை மையங்களில் இனி வரி செலுத்தலாம்!


         சென்னை உள்ளிட்ட, 12 மாநகராட்சிகள் மற்றும், 51 நகராட்சிகளுக்கான வரிகளை, அரசின், இ - சேவை மையங்களில் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


         இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இ - சேவை மையங்களில், 'ஆன்லைன்' மூலமாக, அரசின் சேவைகள் வழங்கப்படுகின்றன. அவற்றுடன், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் வசிப்பவர்களுக்காக, புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.  
          அதன்படி, அவர்கள், தங்களது சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி போன்றவற்றை, இ - சேவை மையங்கள் மூலமாக செலுத்தலாம். இந்த சேவையை பெற, குறைந்த அளவிலான சேவை கட்டணம் உண்டு. தற்போது, 12 மாநகராட்சி மற்றும் பல்லாவரம் உள்ளிட்ட, 51 நகராட்சிகளில், ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு உள்ளன; அதனால், அங்கு வசிப்போர் மட்டும், இவ்வசதியை பெறலாம். மற்ற நகராட்சிகளில், ஆவணப்படுத்தும் பணி நிறைவடைந்ததும், இந்த வசதி விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)