ஆன்லைன் படிப்பு : யு.ஜி.சி., அனுமதி
'அனைத்து பல்கலையிலும், ஆன்லைன் படிப்புகளை நடத்த வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் மூலம், ஆன்லைன் வழி படிப்புகளை நடத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு பல்கலையும், இந்திய உயர் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களும், ஆன்லைன் படிப்பை நடத்த, அங்கீகாரம் தரப்பட்டுள்ளது.