ஐஐஎம்-களில் மாணவர் இடங்களை அதிகரிக்க மத்தியஅரசு திட்டம்


இந்திய நிர்வாகயியல் பயிலகங்களில் (ஐஐஎம்) மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பது தொடர்பான திட்டங்களை சமர்ப்பிக்கும்படி அக்கல்வி நிறுவனங்களிடம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.தில்லி
யில் ஐஐஎம் கல்வி நிறுவனங்களின் தலைவர்களுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், ஐஐஎம்நிறுவனங்களில் அளிக்கப்படும் கல்வியின் திறனை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.அப்போது ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் எவ்வளவு இடங்களை அதிகரிக்க முடியும்? என்பது தொடர்பான திட்டங்களை சமர்ப்பிக்கும்படி பிரகாஷ் ஜாவடேகர் கேட்டுக் கொண்டார். அதற்கு ஐஐஎம் கல்விநிறுவன இயக்குநர்கள், கூடிய விரைவில் அதுதொடர்பான திட்டங்களை அளிப்பதாக வாக்குறுதி அளித்தனர்.

கூட்டத்துக்குப் பிறகு பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஆராய்ச்சி படிப்புகளை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசித்தோம். உலகத் தரத்தில் 20 கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தும் மத்திய அரசின் திட்டத்தில் ஐஐஎம் நிறுவனங்களும் பங்கேற்பது என முடிவுசெய்யப்பட்டுள்ளது என்றார் ஜாவடேகர்.அப்போது அவரிடம், கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில்,"அரசமைப்புச் சட்டத்தின்படியே, கல்வியில் இட ஒதுக்கீடுஅளிக்கப்பட்டுள்ளது; அதில் மாற்றம் செய்யும் திட்டம் எதுவும் அரசிடம் கிடையாது' என்றார்.

நாடு முழுவதும் இருக்கும் 20 ஐஐஎம் நிறுவனங்களில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் மாணவர்கள் படிப்பு முடித்து பட்டம் பெறுகின்றனர். இந்த எண்ணிக்கையை ஆண்டுக்கு 20 ஆயிரமாக அதிகரிப்பதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விரும்புகிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)