கேரம் போட்டி : வத்தலக்குண்டு மாணவிக்கு தங்கம்
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி பள்ளி மாணவி சத்யா, 14. மாலத்தீவில் நடந்த கேரம் போட்டியில் பங்கேற்ற, ஏழு பேர் கொண்ட இந்திய குழுவில் இடம் பெற்றார்.
மாணவி சத்யாவின் தந்தை ஓட்டல் தொழிலாளி. தந்தை வருமானத்தில் போட்டியில் பங்கேற்க வழியின்றி மாணவி தவித்தார்.
பள்ளித் தாளாளர் சேவியர், முதல்வர் ரெக்ஸ் பீட்டர், மாணவி மாலத்தீவு சென்று, வரும் செலவை ஏற்றனர். கேரம் கழக செயலாளர் பிரவீன் செல்வகுமார் ஏற்பாடுகளை செய்தார். கடந்த வாரம் நடந்த போட்டியில் பங்கேற்ற சத்யா, தங்கம் வென்றார். இதையடுத்து திறந்த வேனில் மாணவி சத்யாவை ஊர்வலமாக அழைத்து வந்து, பள்ளியில் பாராட்டு விழா நடத்தினர்.