மின்னணு கழிவில் கம்ப்யூட்டர் மாணவன் சாதனை!!
சாதனைக்கு வயதும், கல்வியும் தடையல்ல என்பதை, மின்னணு குப்பையில் இருந்து கம்ப்யூட்டர் தயாரித்து, 9ம் வகுப்பில் பெயிலான மாணவன் நிரூபித்துள்ளான்.
மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மும்பை, காட்கோபரில் வசிக்கும் ரவீந்திரா என்பவர், பள்ளி, கல்லுாரி மற்றும் அலுவலகங்களில் இருந்து, மின்னணு கழிவுகளை சேகரித்து, சிலவற்றை மறுசுழற்சி செய்தும், மற்றவற்றை விற்பனை செய்தும் வருகிறார். ஒன்பதாம் வகுப்பில் தோல்வியடைந்த இவரது மகன், ஜெயந்துக்கு படிப்பை தொடர்வதில் ஆர்வமில்லை.
தந்தை கொண்டு வரும் மின்னணு கழிவுகளில் இருந்து கம்ப்யூட்டர் தயாரிக்க தேவையான பாகங்களை சேகரித்து, அவற்றை பயன்படுத்தி, மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யும்போது நோயாளியின் நிலையை கண்காணிக்கும் கம்ப்யூட்டரை உருவாக்கினான்.
மும்பையில் மட்டும், 90 லட்சம் கிலோவுக்கும் மேற்பட்ட மின்னணு கழிவுகள் உள்ளன. அவற்றில், 35 லட்சம் கிலோ வரையுள்ள பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்த முடியும் என்று கூறிய ஜெயந்த், தற்போது, தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில், செயின்ட் தெரசா பள்ளியில், 10ம் வகுப்பில் சேர்ந்துள்ளான்