தேசிய அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வேலூர் அரசுப் பள்ளி மாணவர்கள்


விருத்தாச்சலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டியில் வடுகந்தாங்கல் அரசுப் பள்ளி மாணவர்கள் கயிறு இழுக்கும் போட்டியில்
தங்கப்பதக்கம் பெற்றனர்.
மத்திய அரசு சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஊரக விளையாட்டுப் போட்டி கடந்த 27 மற்றும் 28-ம் தேதிகளில் விருதாச் சலத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.

இதில், தடகளம், ஓட்டப்பந் தயம், கபாடி, மராத்தான், குத்துச் சண்டை, ஜூடோ, கால்பந்தாட்டம், கராத்தே, கேரம், சதுரங்கம், டென் னிஸ், கூடைப்பந்து, வாலிபால், சிலம்பம், கயிறு இழுத்தல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கோ-கோ, தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், தமிழக அணி சார்பில் கயிறு இழுக்கும் போட்டியில் வேலூர் மாவட்டம், வடுகந்தாங்கல் அரசுப் பள்ளி மாணவர்கள், ரெண்டாடி அரசுப் பள்ளி மாணவர்கள், சோளிங்கர் யுனிடி மெட்ரிக் பள்ளி மாணவர்கள், ஆர்.கே.பேட்டை அயன்மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 3 பிரிவுகளில் பங்கேற்று விளையாடினர்.
இதில், 17 வயதுக்கு உட்பட் டோர், 19 வயதுக்கு உட்பட்டோர், 19 வயதுக்கு மேற்பட்டோருக்கான கயிறு இழுக்கும் போட்டியில் வடுகந்தாங்கல் அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் சுரேஷ், பிரதீப், பாலச்சந்தர், தினேஷ், ஜெய்கிருஷ்ணன் ஆகியோர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர். தேசிய அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று தமிழக அணிக்காக தங்கப்பதக்கம் வென்ற மாணவர்களை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி, பள்ளித் தலைமை ஆசிரியர் மகாலிங்கம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மணி, வடுகந்தாங்கல் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மோகன் ஆகியோர் பாராட்டினர்.
அதேபோல், தனியார் நிறுவனம் சார்பில் கடந்த சனிக்கிழமை அன்று காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் இருந்து வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானம் வரை நடைபெற்ற மராத்தான் போட்டியில் வடுகந்தாங்கல் அரசுப் பள்ளியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி திவ்யா முதலிடம் பிடித்து ரொக்கப்பரிசாக ரூ.5 ஆயிரமும், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவி ஜனனி 3-ம் இடம் பிடித்து ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றார். அவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் பாராட்டினார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank