உலக அளவிலான தலைசிறந்த கல்வி நிறுவனங்கள்: பின்னுக்குத் தள்ளப்படும் இந்திய கல்வி நிறுவனங்கள்


          உலக அளவிலான உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்திய கல்வி நிறுவனங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. 


              குவாகரெல்லி சைமண்ட்ஸ் (கியூ.எஸ்.) என்ற நிறுவனம், உலக அளவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியல், மண்டலவாரியான தரவரிசைப் பட்டியல்களை வெளியிட்டு வருகிறது.

சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் பதிவு எண்ணிக்கை, புதிய கண்டுபிடிப்புக்கான காப்புரிமை என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. 
நிகழாண்டின் உலக அளவிலான ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதில் தொடர்ந்து 2-ஆவது ஆண்டாக, அமெரிக்காவின் மஸாச்சஸ்டஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்.ஐ.டி.) முதலிடம் பிடித்துள்ளது. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் 2-ஆம் இடமும், ஹார்வார்ட் பல்கலைக்கழகம் 3-ஆம் இடமும் பிடித்துள்ளன. 
முதல் 10 இடங்களில் அமெரிக்காவின் 5 கல்வி நிறுவனங்களும், பிரட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட 4 கல்வி நிறுவனங்களும், சீனாவின் ஈத் ஸýரிச் கல்வி நிறுவனமும் இடம்பிடித்துள்ளன. 
பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும் இந்திய கல்வி நிறுவனங்கள்: கடந்த ஆண்டு 147 ஆவது இடத்திலிருந்த பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) 152 -ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 
கடந்த முறை 179-ஆவது இடத்திலிருந்த தில்லி ஐஐடி இம்முறை 185 இடத்துக்கும், 202-ஆவது இடத்திலிருந்த மும்பை ஐஐடி 219-ஆவது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளன. 
இதேபோல் குவாஹாட்டி ஐஐடி, தில்லி பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. 701 ரேங்குகள் வரையிலான இந்தப் பட்டியலில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் இடம்பெறவில்லை.
ஆறுதல்: அதேசமயம் 254 -ஆவது இடத்திலிருந்த சென்னை ஐஐடி, 5 இடங்கள் முன்னேறி 249 -ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)