காந்தி கிராம பல்கலையில் உலகத்தமிழ் இணைய மாநாடு


காந்தி கிராம பல்கலையில் செப்.,9ல் துவங்கும் உலகத் தமிழ் இணைய மாநாட்டுக்கான பயிற்சி கருத்தரங்கில், மரபு பொறியியல் விபரங்கள், கணினியில் எளிய
மொழியியல் பயன்பாடுகள் குறித்து விளக்கப்பட உள்ளது.
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) - காந்தி கிராம பல்கலை இணைந்து நடத்தும் உலகத் தமிழ் இணைய மாநாடு செப்., 9, 10, 11ல் பல்கலை வளாகத்தில் நடக்க உள்ளது.மாநாடு துவங்குவதற்கு முன், செப்,8ல் ஆசிரியர்களுக்கான கணினித் தொழில்நுட்பப் பயிற்சி, மரபு பொறியியல் தொழில்நுட்பங்கள் பற்றிய விளக்க உரை, கணினியில் எளிதான மொழியியல் பயன்பாடு குறித்த, 'பைத்தான்' மென்பொருள் விளக்கவுரை நடக்க உள்ளது.

கண்காட்சி அரங்கம் : மாநாட்டின் கண்காட்சி அரங்கத்தில் மென்பொருள் நிறுவனங்கள் கணினி தமிழ் பயன்பாடு குறுந்தகடுகள். மின் ஆளுமை விபரங்கள் அடங்கிய குறுந்தகடுகள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. காலை, 9:30 மணி முதல் மாலை, 5:30 மணி வரை கண்காட்சி நடக்க உள்ளது.குறுஞ்செயலி உருவாக்கும் பயிற்சி, கணினி தமிழ் இயந்திரக் கற்றல் உள்ளிட்ட பயிற்சிகள் நடக்க உள்ளன. இதில் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்கலாம்.

ஆய்வரங்கம் :

 நம்நாட்டிலிருந்து, 200 தமிழறிஞர்கள், வெளிநாடுகளில் இருந்து, 60 தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று ஆய்வு கட்டுரைகள், கருத்துக்கள் வழங்க உள்ளனர்.பல்கலை துணைவேந்தர் நடராஜன், தமிழ்த்துறை பேராசிரியர்பத்மநாபபிள்ளை கூறுகையில், “பாரத் பல்கலை துணைவேந்தர்பொன்னவைக்கோ, ஜெர்மனி கொலொன் பல்கலை பேராசிரியர் உல்ரிக்நிக்லசு, 'உத்தமம்' அமைப்பின் தலைவர் இனிய நேரு,கான்பூர் ஐ.ஐ.டி., பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர், என்றனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022