இந்தியாவின் சேமிப்பு விகிதம் குறைந்து வருகிறது


         இந்­தி­யாவின் மொத்த சேமிப்பு விகிதம் குறைந்து வரு­வ­தா­கவும், இதை கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்றும் டி.பி.எஸ்., அறிக்கை தெரி­விக்­கி­றது. 


         முத­லீட்­டிற்கு உள்­நாட்டு சேமிப்பு அவ­சியம் என கரு­தப்­ப­டு­கி­றது. இல்லை என்றால் இதற்­காக வெளி­நாட்டு முத­லீ­டு­களை அதிகம் சார்ந்­தி­ருக்க வேண்டும். இந்­நி­லையில் சர்­வ­தேச நிதியம் தக­வலின் படி, இந்­தி­யாவின் மொத்த சேமிப்பு உள்­நாட்டு உற்­பத்­தியில், 31 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.
2007 முதல் 2008ம் ஆண்டு காலத்தில் இது, 37 சத­வீ­த­மாக இருந்­தது. குறைந்த வரு­மானம், சிக்­க­லான பொரு­ளா­தார சூழ்­நிலை, வட்டி குறைவு உள்­ளிட்­டவை இதற்­கான கார­ணங்­க­ளாக அமைந்­துள்­ள­தாக டி.பி.எஸ்., அமைப்பின் அறிக்கை தெரி­விக்­கி­றது. இந்த போக்கை கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்றும், இல்லை என்றால் அந்­நிய முத­லீட்டின் தேவை அதி­க­ரித்து நடப்பு கணக்கு பற்­றாக்­கு­றையை பாதிக்கும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மற்ற நாடு­க­ளைப்­போல அல்­லாமல், இந்­தி­யாவில் பணி­பு­ரியும் வயதில் உள்­ள­வர்கள் அதிக எண்­ணிக்­கையில் இருப்­பது சாத­க­மான அம்­ச­மாக அமைந்­துள்­ளது என்று அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank