வேலைவாய்ப்பைக் கொட்டிக் குவிக்கும் நிதித்துறை படிப்பு!



காப்பீட்டு கணிப்பு அறிவியல் (Actuarial Science), பலரும் பரவலாக அறியாத, ஆனால் எக்கச்சக்க டிமாண்ட் உள்ள கோர்ஸ். இத்துறை குறித்த தகவல்களைப் பகிர்கிறார் திருச்சி,
பிஷப் ஹீபர் கல்லூரியின் காப்பீட்டு கணிப்பு அறிவியல் துறைத் தலைவர் முனைவர் மாரியப்பன்.

'காப்பீட்டு கணிப்பு அறிவியல் என்றால் என்ன?
கணிதம்(Mathematics), புள்ளியியல் (Statistics) ஆகியவற்றின் துணையோடு காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், பங்குச்சந்தை போன்ற துறைகளின் எதிர்காலச் செயல்பாடுகளைக் கணித்துச் சொல்வதுதான் இந்தத் துறை.
விண்ணப்பம்
பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதம் - இயற்பியல் - வேதியியல் அல்லது காமர்ஸ் வித் பிஸினஸ் மேத்தமெடிக்ஸ் எடுத்துப் படித்தவர்கள், காப்பீட்டு கணித அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
கல்லூரிகள்
தமிழ்நாட்டில் இளங்கலை பி.எஸ்சி., காப்பீட்டு கணிப்பு அறிவியல் படிப்பு திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியில் மட்டுமே உள்ளது. முதுகலைப் படிப்பான எம்.எஸ்சி,, ஆக்‌சுவாரியல் சயின்ஸ் பிஷப் ஹீபர் கல்லூரி, மெட்ராஸ் யுனிவர்சிட்டி, பி. எஸ். அப்துர் ரஹ்மான் யுனிவர்ஸிட்டி ஆகியவற்றில் வழங்கப்படுகிறது. மேலும், பெங்களூரு க்ரிஸ்ட் யுனிவர்ஸிட்டி, கேரளா எம்.ஏ காலேஜ், மும்மை யுனிவர்ஸிட்டி ஆகியவற்றிலும் வழங்கப்படுகிறது.
இளங்கலை படிப்பில் கணிதம் மற்றும் புள்ளியியல் ஆகியவற்றை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் மற்றும் இவற்றை அலைட் சப்ஜெக்ட்டாக(Allied subject) எடுத்துப் படித்தவர்கள் எம்.எஸ்சி., ஆக்சுவாரியல் சயின்ஸ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, ஒரு வருட டிப்ளமோ(PGDCA) கோர்ஸாகவும் காப்பீட்டு கணிப்பு அறிவியல் படிக்கலாம்.

சிலபஸ்
நிதி மேலாண்மை, காப்பீட்டு அறிவியல், ரிஸ்க் மேனேஜ்மென்ட், ஃபினான்ஷியல் மேத்தமெட்டிக்ஸ், பிசினஸ் எக்கனாமிக்ஸ் உள்ளிட்ட பாடங்களை, காப்பீட்டு கணிப்பு அறிவியல் கோர்ஸில் மாணவர்கள் கற்பார்கள்.
வேலைவாய்ப்பு
ஆக்சுவாரியல் சயின்ஸ் படித்தவர்களை காப்பீட்டுத் துறை நிறுவனங்கள் ரெட் கார்ப்பட் விரித்து வெல்கம் செய்கிறார்கள். CT(Core Technical paper) சீரிஸ் எனப்படும் 16 பேப்பர்களை உள்ளடக்கிய தேர்வை க்ளீயர் செய்தால், அவர்கள் Actuari என்றழைப்படுவார்கள். இந்தத் தேர்வுகள் மும்பையில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆக்சுவாரீஸ் ஆஃப் இண்டியாவால்(Institute of Actuaries of India (IAI)) நடத்தப்படுகிறது. இந்த CT பேப்பர்களை எழுத ACET(Actuaries Common Entrance Test) எனப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ப்ளஸ் டூ முடித்தவர்கள் இந்த நுழைவுத்தேர்வை எழுதலாம்.
வெளிநாட்டு நிதி நிறுவனங்கள், பேங்கிங் செக்டார் போன்றவற்றில் ஆக்சுவாரிஸ்களுக்கான(Actuaries)தேவை அதிகளவில் உள்ளது. ACCENTRUE, AON, EXIDE, LIC, SWISS RE போன்ற நிறுவனங்களில் இவர்கள் பிரகாசமான எதிர்காலம் பெறலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)