பொது தேர்வில் கணினி விடைத்தாள்: தேர்வு துறை திட்டம்


          பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு, கணினி விடைத்தாள் வழங்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. 


          இதன் மூலம், விடை திருத்தும் நாட்கள் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அரசு தேர்வுத்துறை சார்பில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும், மார்ச் மாதம் நடைபெறும் இந்தத் தேர்வுகளில், இரண்டு வகுப்புகளிலும் சேர்த்து, 18 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்; இவர்களின் விடைத்தாள்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களால் திருத்தப்படுகின்றன. 

இந்தத் தேர்வில், கணினி அறிவியல் பாடத்திற்கு மட்டும், 'பார் கோடு' உடைய விடைத்தாள்கள் வழங்கப்படுகின்றன; மாணவர்கள், சரியான விடையை தேர்வு செய்து குறியிட வேண்டும். இந்த விடைத்தாள்கள், கணினி முறையில் திருத்தம் செய்யப்படுகின்றன; அதனால், வினாத்தாளை சரியாக திருத்தம் செய்யவில்லை என்ற பிரச்னை எழாது. மேலும், விடைத்தாளை திருத்த ஆசிரியர்களும் தேவையில்லை; அதிக நேர விரயமும் இருக்காது.இந்த முறையை, அனைத்து பாடங்களுக்கும் அமல்படுத்துவது குறித்து, அரசு தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது. அதன்படி, 2017 மார்ச்சில் நடைபெற உள்ள, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில், ஒரு மதிப்பெண் கொள்குறி வகை வினாக்களுக்கு, கணினி விடைத்தாள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது; அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததும், இந்த திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank