அகில இந்திய தொழிற்சங்கங்கள், நாளை நடத்தும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில், தமிழக அரசு ஊழியர்களும் பங்கேற்பதால், மாநிலம் ஸ்தம்பிக்கும் அபாயம் !!! DINAMALAR

அகில இந்திய தொழிற்சங்கங்கள், நாளை நடத்தும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில், தமிழக அரசு ஊழியர்களும் பங்கேற்பதால், மாநிலம் ஸ்தம்பிக்கும் அபாயம் !!! DINAMALAR

         அகில இந்திய தொழிற்சங்கங்கள், நாளை நடத்தும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில், தமிழக அரசு ஊழியர்களும் பங்கேற்பதால், மாநிலம் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து தொழிற்சங்கள் பங்கேற்ப தால், பஸ்கள் இயக்கத்திலும் பாதிப்பு ஏற்படும்.
       விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மய மாக்கக் கூடாது; புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐ.என்.டி.யூ.சி., - எச்.எம்.எஸ்., - சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட, பல தொழிற்சங்கங்கள் இணைந்து, நாளை, நாடு தழுவிய வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.

தொழிற்சங்கங்களை சமாதானப்படுத்தும் வகையில், 'அரசு ஊழியர்களுக்கான போனஸ் தொகையை, இரண்டு மடங்காக உயர்த்தப் படும்; புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ், 2004 முதல் பணக்கொடை தரப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது; இதை, தொழிற் சங்கங்கள் ஏற்க மறுத்து விட்டன.

தமிழகத்திலும் சிக்கல்:இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், தமிழகஅரசு ஊழியர்களும் பங்கேற்கின்றனர். இது குறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி கூறியதாவது:

புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட வேண்டும்; ஊதிய மாற்றக் குழு அமைக்க வேண்டும்; அரசில், காலியாக உள்ள, மூன்று லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, தமிழகத்தில் போராடி வருகிறோம்.அரசு அலட்சியமாக உள்ளதால், வேறு வழியின்றி, ஐந்து லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்கிறோம்.

அரசுவருவாய் துறை அலுவலர் சங்கத்தினரும், வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள னர்; இதனால் தாலுகா, கலெக்டர் அலுவலகங் கள் உட்பட, அனைத்து அரசு அலுவலங்களி லும், நாளை பணிகள் ஸ்தம்பிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

பஸ்கள் ஓடுமா?:

தமிழகத்தில் உள்ள, பல போக்குவரத்து தொழிற் சங்கங்களும், போராட்டத்தில் பங்கேற்கின்றன; இதனால், ஆட்டோ, லாரி, வேன் போக்குவரத்து பாதிக்கப்படும். மேலும், ஆளும் கட்சி அல்லாத, அனைத்து அரசு போக்குவரத்து தொழிற்சங்கங் களும், போராட்டத்தில் பங்கேற்பதால், அரசு பஸ்களின் இயக்கம் பாதிக்கப்படும்.

இதுகுறித்து, அரசு போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர், ஆறுமுக நயினார் கூறியதாவது:அரசு போக்குவரத்து கழங்கள், ஆண்டுக்கு, 1,200 கோடி ரூபாய் நஷ்டத்தில் தள்ளாடுகின்றன. மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் கட்டணம் உள்ளிட்ட, இழப்பீட்டுத் தொகையை, அரசு தர வேண்டும். ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுநடத்துவதோடு, ஓய்வு பெற்றோருக்கான பணப் பலன்களை வழங்க வேண்டும் எனக் கோரி, போராட்டத்தில் பங்கேற்கிறோம்; பஸ்களை இயக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

துறைமுகங்களில் வர்த்தகம் முடங்கும்!சாலை போக்குவரத்து பாதுகாப்புக் குழு தலைவர், சுகுமார் கூறுகையில், ''சாலை பாதுகாப்பு மசோதாவில், மத்திய அரசு திருத்தம் செய்வதைக் கண்டித்து, நாளை, சென்னைத் துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம்; கனரக வாகனங்கள் இயக்கப் படாது,'' என்றார். இதனால், சென்னை மட்டு மின்றி, தமிழகம் முழுவதும், துறைமுகங் களின் செயல்பாடுகளும் தடைபடும்; வர்த்தகம் முடங்கும்.

நாளை பள்ளிகள் இயங்குமா?

நாளை நடக்கும் நாடு தழுவிய, போராட்டத்தில், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி ஆசிரி யர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

இவர்கள் விடுப்பு எடுத்து பங்கேற்பதால், ஆயிரக்கணக்கான பள்ளிகளில், நாளை வகுப்புகள் நடத்துவதில் பாதிப்பு ஏற்படும். பல இடங்களில், தொடக்க பள்ளிகளை மூடி, சனிக்கிழமை இயக்கப்படும் என தெரிகிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)