NHIS : வரம்பை மீறி சிகிச்சைக்கு பரிந்துரை: அரசு உத்தரவு


     'மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு, பரிந்துரை செய்யும் குழுக்கள், அரசாணை வரம்பை மீறி, பரிந்துரை செய்வதை தவிர்க்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டு
ள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், தெரிவிக்கும் குறைகளை களைய, மாவட்ட அளவில், கலெக்டர் தலைமையிலும், மாநில அளவில், கருவூல கணக்கு துறை இயக்குனர் தலைமையிலும், குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதித்துறை செயலர் - செலவினம் தலைமையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், சுகாதாரத்துறை செயலர், 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவன பிரதிநிதியும் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர், அனுமதி பெறாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதற்கும், அனுமதி அளிக்கப்படாத சிகிச்சைக்கும், பரிந்துரை செய்கின்றனர்; அதை, காப்பீட்டு நிறுவனம் ஏற்பதில்லை.
இதை எதிர்த்து, அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கோர்ட்டுக்கு செல்கின்றனர். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், சேர்க்கப்படாத மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கு உதவி செய்ய, அரசிடம் திட்டம் இல்லை.மாவட்ட, மாநில அளவிலான குழுவினர், அரசு ஆணைக்கு புறம்பாக, மருத்துவ செலவினம் வழங்க, பரிந்துரைக்க வேண்டாம்; அரசுக்கு எதிராக, வழக்கு வருவதை தவிர்க்கலாம் என, நிதித்துறை செயலர் சண்முகம் பிறப்பித்த
அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)