TNPSC:குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்.8 கடைசி நாள்

TNPSC:குரூப்-4 தேர்வுக்கு இதுவரையில் ஆறரை லட்சம் பேர் விண்ணப்பம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்.8 கடைசி நாள்
       டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரையில் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். விண் ணப்பிக்க செப்டம்பர் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும்.


5,451 காலியிடங்கள்


தமிழக அரசின் பல்வேறு துறை களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) மற்றும் வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டிருந்தது. இதற்கான ஆன்லைன் விண்ணப் பம் கடந்த ஆகஸ்டு 9-ம் தேதி தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி, 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரி வித்தார்.ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும். இன்னும் 8 நாள்கள் காலஅவகாசம் இருப்பதால் சுமார் 11 லட்சம் பேர் விண்ணப்பிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த ஆண்டு குரூப்-4 தேர்வுக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணச் சலுகை

குரூப்-4 தேர்வுக்கு கட்டணமாக ரூ.75 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிரந்தரப் பதிவுக்கென ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தைப் பொருத்த வரையில், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் தேர்வுக் கட்டணம்ஏதும் செலுத்தத் தேவையில்லை. பிசி, பிசி (முஸ்லிம்) எம்பிசி, டிஎன்சி வகுப்பினர் பட்டதாரியாக இருப்பின் 3 முறை மட்டும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

நவம்பர் 6-ம் தேதி

3 முறை தேர்வுக் கட்டணச் சலுகையை அனுபவித்தவர்கள் அதன்பிறகு கண்டிப்பாக தேர்வுக் கட்டணம் செலுத்தித்தான்தேர் வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 3 முறை என்ற நிபந்தனையைத் தாண்டி தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் விண்ணப்பித்து ஒருவேளை பணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அத்தகைய விண்ணப்பதாரர்கள் பிரச்சி னையை எதிர்கொள்ள நேரிடும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். எனவே, கட்டணச்சலுகை வாய்ப்பு பெற்றிருப்பவர்கள், எத்தனை முறை கட்டணச்சலுகையை பயன் படுத்தியுள்ளோம் என்பதை உறுதி செய்துவிட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எழுத்துத் தேர்வு நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)