12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மறுமதிப்பீடு முறை ரத்து: சிபிஎஸ்இ கல்வி வாரியம் முடிவு


         12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மறுமதிப்பீடு முறை ரத்து: சிபிஎஸ்இ கல்வி வாரியம் முடிவு- அடுத்த ஆண்டுமுதல் அமலுக்கு வருகிறது.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மறுமதிப்பீடு முறையை ரத்து செய்ய முடிவெடுக்கப் பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது.மத்திய அரசு ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், ராணுவத்தினர் பணி காரணமாக நாடு முழுவதும் இடம் மாறக்கூடியவர்கள். இதனால் அவர்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியாக மத்திய இடை நிலைக் கல்வி வாரியத்தின் கல்வித்திட்டம் (சிபிஎஸ்இ) நடைமுறைப்படுத்தப்படுகிறது.மாநிலப் பாடத்திட்டம் போலவே சிபிஎஸ்இயிலும் 10, 12-ம் வகுப்பு தேர்வுகள், பொதுத்தேர்வுநடத்தப்படுகின்றன. 10-ம் வகுப்பு தேர்வை பொதுத்தேர்வாக அல்லாமல், சாதாரண பள்ளி அளவி லான தேர்வாக எழுதிக்கொள்ளும் வாய்ப்பும் உண்டு. மேலும், மாநில பொதுத்தேர்வில் உள்ளது போல சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப் பிக்கும் வசதியும் இருந்தது.இந்நிலையில், 12-ம் வகுப்பு தேர்வில் மறுமதிப்பீடு முறையை ரத்து செய்ய சிபிஎஸ்இ முடி வெடுத்துள்ளது. 
இதற்காக சிபிஎஸ்இ தேர்வு துணை விதி 61 (IV)-ல் திருத்தம் செய் யப்பட்டுள்ளது. மறுமதிப்பீடு தொடர்பாக அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டு, சமீபத்தில் நடந்த சிபிஎஸ்இ ஆட்சிக்குழு கூட்டத் தில் அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. 
மேல்முறையீட்டு வாய்ப்பு 
நன்கு தேர்வு எழுதியபோதிலும் குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மேல்முறையீட்டு வாய்ப்பாக இந்த மறுமதிப்பீடு முறை இருந்தது. விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்களின் கவனக்குறைவு, சரியாக திருத்தாதது, சரியாக கூட்டாதது போன்ற காரணங்களால் மாணவர்களின் மதிப்பெண் விடுபட்டுப் போக வாய்ப்பு உண்டு. மறுமதிப்பீடு செய்யும்போது, இதுபோன்ற காரணங்களால் இந்த மதிப்பெண்ணை மாணவர்கள் மீண்டும் பெறுகிற வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதி மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில் பலருக்கு மதிப்பெண்களில் மாற்றம் வருகிறது. கவனக்குறை வாக விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள் மீது தேர்வுத்துறை ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்துள்ளது. 
மறுமதிப்பீடு முறை ரத்து செய்யப்பட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? என்று சென்னை நங்கநல்லூர் மாடர்ன் சீனியர் செகண்டரி மேல்நிலைப்பள்ளி முதல்வர் கே.மோகனாவிடம் கேட்டபோது, ‘‘பெரும்பாலும் சிபிஎஸ்இ 12-ம்வகுப்பு பொதுத்தேர்வில் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களின் மதிப்பெண்ணில் வேறுபாடு எதுவும் வருவ தில்லை. அந்த அளவுக்கு முதல்முறையிலேயே விடைத் தாள்கள் துல்லியமாக திருத்தப் படுகின்றன. அதனால், மறுமதிப் பீட்டுக்கு அவசியம் இல்லை. பெற்றோர், உறவினர்கள் வற்புறுத்துவதால் வேறுவழியின்றி மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கின்றனர். மறு மதிப்பீடு முறை நீக்கப்படுவதால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என்றார். இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என தெரிகிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)