பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு: அக்டோபர் 25 முதல் வினா வங்கி புத்தகங்கள்


          தமிழகம் முழுவதும் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு அறிவியல் பாடப் பிரிவு மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகங்கள் வரும் 25-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.


          இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ""10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில், பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வினா வங்கி, மாதிரி வினா ஏடுகள், தீர்வுப் புத்தகங்களை தயாரித்து, தமிழ்நாட்டு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் மூலம் அச்சிட்டு குறைவான விலையில் விற்பனை செய்து வருகிறது. செப்டம்பர், மார்ச் மாதங்களில் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வு வினாத் தாள்கள் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் வினா வங்கி புத்தகம் வெளியிடப்படுகிறது.
 மாவட்டத்துக்கு ஒரு மையம் வீதம்...:இந்த ஆண்டுக்கு உரிய பிளஸ் 2 அறிவியல் பாடப் பிரிவு, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய வினா வங்கி புத்தகங்கள் அச்சிடும் பணி முடிவடைந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பும் பணி நிறைவடையும் நிலை உள்ளது. சென்னையைப் பொருத்தவரை மூன்று மையங்கள், பிற மாவட்டங்களுக்கு ஒரு மையம் வீதம் வினா வங்கி புத்தகங்கள் விநியோகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு உரிய வினா வங்கி புத்தகங்கள் வரும் 25-ஆம் தேதி முதல் அனைத்து மையங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.
 விலை எவ்வளவு? பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி, மாதிரி வினா புத்தகங்கள், தீர்வுப் புத்தகங்கள் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் ஒவ்வொரு பாட வரிசைக்கும் ரூ.30 முதல் ரூ.100 வரையும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினா வங்கி மற்றும் அனைத்துப் பாடங்களுக்கும் பொதுத் தேர்வு வினாத் தாள்களின் தொகுப்பு ஆங்கில வழியில் ரூ.220 வீதமும் தமிழ் வழியில் ரூ.225 வீதமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 வணிகவியல், கணக்குப் பதிவியல் மாணவர்களுக்கு...: பிளஸ் 2, 10-ஆம் வகுப்பில் படிக்கும் அறிவியல் பிரிவு அல்லாத வணிகவியல் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகங்கள் அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது; இந்த வினா வங்கி புத்தகங்கள் நவம்பர் மாத இறுதியில் அனைத்து மாவட்ட மையங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.
வினா வங்கி புத்தகங்கள் வழங்கும் மையங்கள்
 சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளி, அரும்பாக்கம்;
 ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை;
 எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு.
 காஞ்சிபுரம்: அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை.
 திருவள்ளூர்: ஆர்.எம்.ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி.
 வேலூர்: வெங்கடேஷ்வரா மேல்நிலைப் பள்ளி

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)