பிளஸ் 2 பாடபுத்தக அளவு மாற்றம்!!!
பிளஸ் 2 பாட புத்தகத்தின் அளவில், மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சரி பார்ப்பு பணி நேற்று துவங்கியது.
பிளஸ் 2 பாட புத்தகம், ஏ5 அளவில் (5.83x8.27) உள்ளது. இதனால் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டது. கற்றலில் பின்னடைவு மற்றும் கற்கும் திறன் தாமதமாவதாகவும் ஒ
ரு கருத்து எழுந்தது. இதை தொடர்ந்து புத்தக அளவை மாற்றம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி ஏ4 அளவில் (8.27x11.69) புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது.
ஒரு குழுவில் அரசு, மெட்ரிக்., பள்ளி என இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். ஈரோடு மட்டுமின்றி திருச்சி, சென்னையிலும் நடக்கும் இந்தப் பணி, அக்.,1ம் தேதி வரை நீடிக்கும் என்று, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்