தமிழ்நாடு தபால் வட்டத்தில் 310 தபால்காரர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தபால் வட்டத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 310 தபால்காரர் பணியிடங்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பத்தாம் வகுப்பு முடித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 310
பணியிடம்: தமிழ்நாடு

பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Postman - 304
பணி: Mail Guard - 06

தகுதி: இரு பணிக்கும் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 15.11.2016 தேதியின்படி 18 - 27-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு மட்டும் ரூ.400.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.11.2016

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 18.11.2016

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 2016, ஜனவரி 2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://dopchennai.in/PDF/Notification-1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)