ஆசிரியர் திறன் மேம்பாட்டுக்கான 'சென்டா ஒலிம்பியாட்' போட்டி: அக்.31-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.


             ஆசிரியர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் டிசம்பர்3-ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்படவுள்ள ‘சென்டா ஒலிம்பி யாட்’ போட்டிக்கு அக்டோபர் 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.


          ‘சென்டா டீச்சிங் புரொஃபஷ் னல்ஸ் ஒலிம்பியாட்- 2016’ என்பது ஆசிரியர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டி ஆகும்.
இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் நாடு முழுவதும் 22 நகரங்களில் டிசம்பர் 3-ம் தேதி சென்டா போட்டிகள் நடத்தப்படுகின்றன.இந்த போட்டிகளை ‘தி இந்து’நாளிதழ், மைக்கல் அண்ட் சூசன் டெல் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் 13 பிரிவுகளில் போட்டி நடைபெறும். இதில் ஆரம்பநிலை, இடைநிலை, உயர்நிலை என தங்கள் விருப்பத்துக்கேற்ப ஆசிரி யர்கள் போட்டிப் பாடப் பிரிவை தேர்ந்தெடுக்கலாம். இப்போட்டி யில் பங்கேற்க ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும். ஆசிரி யர்கள், பள்ளி முதல்வர்கள், கல்வி யாளர்கள் என அனைத்து தரப்பி னரும் போட்டிப்போட்டு பதிவுசெய்து வருகிறார்கள். தனியார் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி அரசு பள்ளி ஆசிரியர்களும் போட்டியில் பங்கேற்க மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். சென் னையில் அதிகம்பேர் பதிவுசெய் துள்ளனர். இதற்கு அடுத்தபடி யாக டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் அதிகளவில் பதிவு நடக்கிறது. பெங்களூரைச் சேர்ந்த 77 வயது, 68 வயது நிரம்பிய தம்பதியர் கூட சென்டா போட்டிக் காக பதிவுசெய்துள்ளனர். 
3 பேருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு 
மொத்தமுள்ள 13 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுபவர்களுக்கு துபாயில் 2017-ல் நடைபெறவுள்ள உள்ள உலக கல்வி, திறன்மேம்பாட்டு மாநாட்டில் பங்கேற்க வார்கே அறக்கட்டளை சார்பில் வாய்ப்பு அளிக்கப்படும். மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் முதலிடம் பிடிப்பவர்களின் பெயர் விவரங்கள் ‘தி இந்து’நாளிதழில் வெளியிடப்படும். இதுதவிர, வெற்றி பெறும்ஆசிரியர்களுக்கு சென்ட்ரல் ஸ்கொயர் அறக்கட் டளை சார்பில் வெளியாக உள்ள புத்தகத்தில் எழுதும் வாய்ப்பும் அளிக்கப்படும். மேலும், வெற்றியாளர்கள் 3 பேருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு உள்பட எச்டி பாரேக் அறக்கட்டளை சார்பில் 50 பேருக்கு ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. கணினி மூலம் போட்டி நடத்தப்படும்.தேர்வு செய்துள்ள பாடம், பாடம் நடத்தும் விதம் உள்ளிட்டவை தொடர்பாக ‘அப்ஜெக்டிவ்’வகை யில் கேள்விகள் இடம்பெறும். 
போட்டி குறித்த கூடுதல் விவரங் கள், பெயர் பதிவு தொடர்பான விவரங்களை இணையதளத்தில் (www.tpo-india.org) தெரிந்து கொள்ளலாம். இப்போட்டிக்கு அக் டோபர் 31-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று சென்டர் ஃபார் டீச்சர் அக்ரெடி யேஷன் (சென்டா) அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ரம்யா தெரிவித்துள்ளார்.பெங்களூரைச் சேர்ந்த 77 வயது, 68 வயது நிரம்பிய தம்பதியர்கூட சென்டா போட்டிக்காக பதிவுசெய்துள்ளனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)