32 லட்சம் DEBIT CARD PIN NO. களவு - உடனடியாக உங்கள் ATM. PIN நம்பரை மாற்றுங்கள்?
சில சமயங்களில் வங்கிகளிடம் இருந்து உங்கள் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். உங்கள் ஏ.டி.எம் பின்கோட் எண்ணை மாற்றி அமைத்துக் கொள்ளுங்க
ள். இந்த செய்தி பாதுகாப்பை மேம்படுத்த மட்டுமே என வந்திருக்கும். நம்மில் பலர் அந்த செய்தியை ''ஜஸ்ட் லைக் தட்'' கடந்து செல்வதையே வாடிக்கையாக வைத்திருப்போம். ஆனால் அதன் விளைவு எவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறது தெரியுமா? 32 லட்சம் டெபிட் கார்டுகளின் பின் நம்பர்கள் களவு போய்யுள்ளதாகவும், இதில் பெருமபாலான கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கிகள் பின் நம்பரை மாற்ற சொல்வது ஏன்?
இந்தியாவில் 32 லட்சம் டெபிட் கார்டுகளை மாற்றித் தரவோ அல்லது வாடிக்கையாளர்களை பின் நம்பரை மாற்றவோ சொல்ல வங்கிகள் முடிவெடுத்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் சீனாவில் அங்கீகாரமற்ற முறையில் இந்த எண்கள் பயன்படுத்தப்பட்டு கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. இந்த பரிமாற்றங்கள் சீனாவில் ஏ.டி.எம், பொருட்களை பர்சேஸ் செய்யும் இடம் போன்ற இடங்களில் பதிவாகியுள்ளது.
வாடிக்கையாளரின் தகவல்கள் திருடப்பட்டு அதே போன்று குளோனிங் Pசய்து பயன்படுத்தப் படுகிறது. மொத்தமுள்ள 32 லட்சம் கார்டுகளில் 26 லட்சம் கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டு வகைகளை சேர்ந்தது என்றும், மீதமுள்ள 6 லட்சம் கார்டுகள் ரூ-பே கார்டுகள் என்றும் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான கார்டுகள் எஸ்.பி.ஐ மற்றும் ஹச்.டி.எஃப்.சி வங்கிகளைச் சேர்ந்த கார்டுகளாக உள்ளன.
எஸ்.பி,ஐ 6 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இந்த விஷயம் தொடர்பாக புதிய கார்டுகளை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறுகிறது. வங்கிகள் எண்களை மாற்ற சொல்கிறது என்பதை சாதாரண விஷயமாக கருதாமல் அதனைக் கொஞ்சம் சீரியசாக அணுகுங்கள். வங்கிகள் அடிக்கடி பின் நம்பரை மாற்றுவது நினைவில் வைத்துக் கொள்ள கடினமாக தான் இருக்கும் ஆனால் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது மாற்றிவிடுங்கள் என்கின்றன வங்கிகள்.
உங்கள் எண்கள் இந்த 32 லட்சம் எண்களில் இருக்கறதோ? இல்லையோ? பாதுகாப்புக்காக உங்கள் ஏ.டி.எம் பின் நம்பரை உடனடியாக மாற்றி விடுங்கள்.
தகவல்கள் எப்படி திருடப்படுகின்றன?
நமக்கு மட்டுமே தெரிந்த நமது பின் நம்பர், கார்டு எண்கள் எப்படி திருடப்படுகின்றன. அதுவும் சீனாவில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்றால் அதற்கு பின்வரும் காரணங்கள் முக்கியமானவையாக கூறப்படுகின்றன.
1. பர்சேஸ் செய்ய ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தும் இடத்தில் ''ஸ்கிம்மர்கள்'' எனும் கருவி ஸ்வைப் செய்யும் கருவியுடன் இணைக்கப்பட்டு மொத்த தகவலும் எடுக்கப்படலாம்.
2. ஏ.டி.எம் நிலையங்களிலேயே ஸ்கிம்மர்கள் பொருத்தப்பட்டு அனுமதியற்ற முறையில் தகவல்கள் திருடப்படலாம்.
3. போலியான இணையதளங்களில் பணப்பரிவர்த்தனை செய்வது முறையற்ற முறையில் ஸ்க்ரீன் கேப்சர் செய்யப்படுவது.
4. அதிகாரபூர்வமற்ற வங்கி ஆப்ஸ்கள் மூலமாகவும் தகவல்கள் திருடப்படுகிறது.
இப்படியெல்லாம் திரட்டப்படும் தகவல்கள் குறிப்பிட்ட பெரிய தொகைக்கு விற்கப்படுகிறது. இப்படித் தான் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு பணம் திருடுபோகிறது.
என்ன செய்ய வேண்டும்?
1. வங்கிகளின் இணையதளங்களை நீங்களே டைப் செய்து செல்லுங்கள். இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்-ல் வரும் லின்க்களை க்ளிக் செய்யாதீர்கள்.
2.வங்கிகளின் முறையான ஆப்ஸை மட்டுமே பயன்படுத்துங்கள்.
3. பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் இங்கெல்லாம் டெபிட் கார்டை பயன்படுத்தும்போது அந்த கருவிகளில் வித்தியாசமாக ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கவனியுங்கள்.
4. ஆன்லைன் ஆர்டர்களை கூடியமட்டில் கேஷ் ஆன் டெலிவரியாக செய்யுங்கள்
5. ப்ரெளசிங் சென்டர்களில் பணப்பரிவர்த்தனை செய்வதை தவிருங்கள்.