மெட்ரோ ரெயில்வேயில் 3,428 பணியிடங்கள்


           டெல்லி மெட்ரோ ரெயில்வேயில் 3 ஆயிரத்து 428 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-
 
 டெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் மெட்ரோ ரெயில்வே பணிகள் நடந்து வருகின்றன. சில திட்டங்கள் செயல்பாட்டிற்கும் வந்துள்ளன. இந்த துறையில் டெல்லி மெட்ரோ ரெயில்வேயில் 3ஆயிரத்து 428 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பிரிவு வாரியாக மெயின்டனர் பணிக்கு 1393 பணியிடங்களும், ஸ்டேசன் கண்ட்ரோல்/ டிரெயின் ஆபரேட்டர் பணிக்கு 662 பணியிடங்களும், கஸ்டமர் ரிலேசன்ஷிப் அசிஸ்டன்ட் பணிக்கு 1100 பணியிடங்களும், ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு 205 இடங்களும் உள்ளன. அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு 44 இடங்களும், அக்கவுண்ட் அசிஸ்டன்ட் பணிக்கு 24 இடங்களும் உள்ளன. பி.இ., பி.டெக் படித்தவர்கள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.பி.ஏ. படித்தவர் களுக்கு அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். என்ஜினீயரிங் பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்களுக்கு ஜூனியர் என்ஜினீயர் மற்றும் டிரெயின்ஆபரேட்டர் போன்ற பணிகளில் வாய்ப்பு உள்ளது. 3 ஆண்டு, 4 ஆண்டு கால பட்டப்படிப்பை முடித்தவர்கள் கஸ்டமர் ரிலேசன் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ. படித்தவர்கள் மெயின்டெய்னர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் 1-7-2016 தேதியில் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1988 மற்றும் 1-7-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். 

எழுத்து தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல், உளவியல் தேர்வு, மருத்துவ பரிசோதனை போன்ற தேர்வுமுறைகளில் பணிக்கு அவசியமான தேர்வுகள் பின்பற்றப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 15-10-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.delhimetrorail.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)