இன்று முதல் 374 இடங்களில் மீண்டும் 'ஆதார்' பணி


         தமிழகத்தில், இன்று முதல், 374 மையங்களில், 'ஆதார் அட்டை' வழங்கும் பணிகள் மீண்டும் துவங்குகின்றன.


            தமிழகத்தில், செப்., 30 வரை, ஆதார் அட்டை வழங்கும் பணியை, மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. அக்., 1 முதல், அப்பொறுப்பு, தமிழக அரசின், தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள, அரசு கேபிள், 'டிவி' மற்றும் மின்னணு கழகமான, 'எல்காட்' வசம் வந்துள்ளது. சில தொழில்நுட்ப மாற்றங்களை செய்ததால், சில நாட்களாக, ஆதார் பணிகள் பாதிக்கப்பட்டன. இன்று முதல், 374 மையங்களிலும், பணிகள் முழுவீச்சில் துவங்குகின்றன.

இது குறித்து, அரசு கேபிள், 'டிவி' அதிகாரிகள் கூறியதாவது: தொழில்நுட்ப பிரச்னை கள் சரி செய்யப்பட்டு, நேற்று மதியம் முதல், பல மையங்களில், ஆதார் அட்டைக்கு புகைப்படம் மற்றும் கைரேகை பதியும் பணிகள் துவங்கின. இன்று முதல், தலைமை செயலகம், ரிப்பன் மாளிகை, எழிலகம், கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், தாலுகாஅலுவலகங்கள் உட்பட, சென்னையில், 63 இடங்களில், இப்பணிகள் நடைபெறும். 
மாநிலம் முழுவதும், 275 தாலுகா அலுவலகங்கள், 32 மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் உட்பட, மொத்தம், 374 இடங்களில், மக்கள், ஆதார் அட்டைக்கு மனு செய்யலாம். அடுத்த வாரத்தில் இருந்து, தமிழகத்தில் உள்ள, இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் என, 600 மையங்களும், முழுவீச்சில் செயல்படும்; மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இனி மூன்று படிவம்

● ஆதார் அட்டை வழங்க இனி, மூன்று படிவங்கள் தரப்படும்; அவை தமிழில் இருக்கும்
● ரேஷன் கார்டு உள்ளிட்ட, ஏதேனும் ஒரு இருப்பிட சான்று; தனி நபர் சான்றுக்காக, வங்கி புத்தகம், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, அஞ்சலகம் வழங்கும் முகவரி சான்றில், ஏதேனும் ஒன்றை எடுத்து செல்ல வேண்டும்
● தனி நபர் சான்று ஆவணங்கள் இல்லாதோர், கிராம நிர்வாக அலுவலரிடம், இருப்பிடச் சான்று பெற்று வரலாம்; இதுவரை இருந்த, 'டோக்கன்' முறை இனி இருக்காது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank