"ஸ்பீடு' முக்கியம் ,ஆதார் பதிவிட்டால் மட்டுமே "ஸ்மார்ட்' கார்டு வரும் !!!
"ஸ்பீடு' முக்கியம்!ஆதார் பதிவிட்டால் மட்டுமே "ஸ்மார்ட்' கார்டு வரும்:வரும், 31ம் தேதிக்குள் "ஸ்கேன்' செய்ய அவகாசம்!!!
ஆதார் விவரங்களை பதிவு செய்த கார்டுதாரர்களுக்கு மட்டுமே,"ஸ்மார்ட்' கார்டு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்; வரும், 31க்குள், ஆதார் "ஸ்கேன்' செய்து கொள்ளும்படி, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 1,135 ரேஷன் கடைகளில், ஏழு லட்சத்து, 29 ஆயிரத்து, 370 ரேஷன் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; 23 லட்சத்து, 45 ஆயிரத்து, 548 நபர்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள்
வழங்கப்படுகின்றன.மாவட்டத்தில் அதிகபட்சமாக, திருப்பூர் வடக்கு தாலுகாவில், 4.75 லட்சத்துக்கு அதிகமானவர்களும்; திருப்பூர் தெற்கு தாலுகாவில், 4.12 லட்சத்துக்கு அதிகமானவர்களும்; "மொபைல்' மற்றும் ஆதார் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என, கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த வார நிலவரப்படி, மாவட்ட அளவில் இதுவரை, 14 லட்சத்து, 48 ஆயிரத்து, 315 பேர், ஆதார் விவரத்தை "ஸ்கேன்' செய்துள்ளனர். திருப்பூர் வடக்கில், 55 சதவீதம் பேர்; திருப்பூர் தெற்கில், 56 சதவீதம் பேர், ஆதார் விவரங்களை "ஸ்கேன்' செய்துள்ளனர். தபால் மூலம் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை "ஸ்கேன்' செய்வது எளிதாக உள்ளது. "ஆன்-லைன்' மூலம் பதிவிறக்கம் செய்த அட்டைகளை "ஸ்கேன்' செய்வதில் குளறுபடி நீடிக்கிறது.
பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகள், டிச., 31ல் காலாவதியாகிறது. வரும் ஜன., முதல், "ஸ்மார்ட்' கார்டு மூலம், பொருள் வினியோகம் நடக்க உள்ளது. வரும், டிச., மாதம், "ஸ்மார்ட்' கார்டு அச்சிட்டு வழங்கும் பணி நடக்கும் என்பதால், ஆதார் "ஸ்கேன்' செய்யும் பணியை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் கூறியதாவது:மாவட்டத்தில், ரேஷன்
பயனாளிகளில், 62 சதவீதம் பேரின் ஆதார் விவரம் "ஸ்கேன்' செய்யப்பட்டுள்ளது. "பாயின்ட் ஆப் சேல்' கருவியில், ரேஷன் கார்டு, "மொபைல்' மற்றும் ஆதார் விவரங்களை பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே, புதிய ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும். இம்மாத இறுதிக்குள், கார்டில் <உள்ள, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நீங்கலாக, அனைவரின் ஆதார் விவரத்தையும் "ஸ்கேன்' செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
வரும் நவ., மாதம் முதல், அனைத்து குடும்ப உறுப்பினரின் ஆதார் விவரத்தை பதிவு செய்தவர்கள் மட்டுமே, பொருட்கள் பெற முடியும். ரேஷன் கார்டில் உள்ள, அனைத்து நபர்களின் ஆதார் விவரம் பதியாமல் இருந்தால், கார்டு தானாக ரத்தாகிவிடும். குடும்ப தலைவர் அல்லது யாராவது ஒருவரின் ஆதார் பதிவு செய்தால் மட்டுமே, பொருட்கள் கிடைக்கும். வரும் டிச., மாதத்தில், "ஸ்மார்ட் கார்டு' தயாரித்து வழங்கும் பணி நடக்க உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கலர் "ஜெராக்ஸ்' தேவையில்லை
ரேஷன் கடையில் உள்ள "பாயின்ட் ஆப் சேல்' கருவியில், ஆதார் அட்டையை "ஸ்கேன்' செய்ய முடியாதவர்கள், கலர் ஜெராக்ஸ் எடுப்பதற்கு பதிலாக, கருப்பு-வெள்ளை ஜெராக்ஸ் எடுத்தால், எளிதாக "ஸ்கேன்' செய்யலாம் என, அலுவலர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
"ஸ்மார்ட்' போனில் கூட பதியலாம்
ஆதார் பதிவுக்கு, ரேஷன் கடைக்கு செல்ல வாய்ப்பு இல்லாதவர்கள், தங்களது "ஸ்மார்ட்போன்' மூலம், ரேஷன் கடை நிலவரத்தை அறியலாம்; ஆதார் எண்ணையும் "ஸ்கேன்' செய்து கொள்ளலாம். கடையின் இருப்பு விவரம், முகவரி, குடும்ப உறுப்பினர் விவரம், பரிவர்த்தனை போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு, கூகுள் பிளே ஸ்டோரில், "கூNகஈகு' என்ற செயலியை பதிவிறக்கும் செய்து, அதன் வழியாக சென்று, ரேஷன் கடையில் கொடுக்கப்பட்டுள்ள "மொபைல்' எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன்பின், மொபைல்போனுக்கு வரும் "பாஸ்வேர்ட்' கொண்டு, பொதுவினியோக திட்ட செயலில், ஆதார் விவரம் பதிவு உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.