தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

பெற்றோரிடம் இருந்து பிரித்து தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

          தன் வயதான பெற்றோரை உடன்வைத்து பராமரிக்க சம்மதிக்காத மனைவியை, ஒரு இந்து மகன் விவாகரத்து செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

         கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நபர், விவகாரத்து தொடர்பாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.அதில் தீர்ப்பை எழுதிய நீதிபதி அனில் ஆர் தவே கூறியிருப்பதாவது: 
‘பெற்றோரால் வளர்த்து, கல்வி புகட்டி வளர்க்கப்படும் மகனுக்கு, வயதான, வருமானம் இல்லாத அல்லது குறைவான வருமானமே உடைய தனது பெற்றோரை பராமரிக்கும் தார்மீக பொறுப்பம், சட்டப்பூர்வ கடமையும் இருக்கிறது. மேற்கத்திய கலாச்சாரத்தில் தான் திருமணம் ஆனதும் அல்லது வயது வந்ததும் மகன் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து விடுகிறார். ஆனால் இந்தியாவில் மக்கள் பொதுவாக மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுவதில்லை.

இந்து சமூகத்தில் பிறந்த ஆண், அவரது பெற்றோரை பிரித்து வாழ்வது கலாச்சாரத்திற்கு எதிரானதாக கருதப்படுகிறது. பணம் சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்கும் பெற்றோர், தனது மகனை சார்ந்து வாழும் சூழலில் அவர்களை பிரிந்துசெல்வது சரியான செயல் இல்லை.

 எனவே சரியான காரணமின்றி பெற்றோரிடமிருந்து கணவனை பிரிக்க மனைவி நினைப்பது கொடுமையாகவே கருதப்படும் அதுபோன்ற சூழலில் மனைவியை கணவன் விவகாரத்து செய்ய சட்டத்தில் இடமிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)