மாணவர்களின் வருகைப் பதிவு, வீட்டுப் பாட விவரத்தை எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் வசதி
மாணவர்களின் வருகைப் பதிவு, வீட்டுப் பாட விவரத்தை எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் வசதி: 44 அரசு மாதிரி பள்ளிகளில் விரைவில் அறிமுகம்.
மாணவர்களின் வருகைப் பதிவு, வீட்டுப் பாடம், கல்வி நிலை ஆகிய விவரங்களை அவர்களின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் வசதி 44 அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி களில் விரைவில் அறிமுகப்படுத் தப்பட ஆர்எம்எஸ்ஏ திட்ட மிட்டுள்ளது.
கல்வியில் பின்தங்கிய பகுதி களில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் மாதிரி பள்ளிகள் திட்டம் மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் (ஆர்எம்எஸ்ஏ) மூலம்செயல்படுத் தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய அரியலூர், பெரம்பலூர், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், சேலம் உள்பட 13 மாவட்டங்களில் ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இதற்காக அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது. இந்த எஸ்எம்எஸ் சேவை திட்டத்தை ஒரு மாதத்தில் செயல்படுத்தவும் அது வெற்றிகரமாக வரும்பட்சத் தில் இதர பள்ளிகளுக்கும் விரிவு படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆர்எம்எஸ்ஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.