மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெறுகிறார் யோஷினேரி


மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜப்பானின் யோஷினேரி ஒஸ்மிக்கு வழங்கப்படுகிறது.




2016ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. விருது, ஜப்பானை சேர்ந்த பேராசிரியர் யோஷினேரி ஒஸ்மிக்கு வழங்கப்பட்டுள்ளது.

உடல் செல்கள் தம்மை தாமே அழித்து கொள்வது பற்றிய ஆட்டோபேஜி என்ற ஆய்வு மேற்கொண்டதற்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது. டோக்கியோ பல்கலையில் செல்லியல் துறை பேராசிரியரான ஒஸ்மி, ஆட்டோபேஜி எனப்படும் செல்லியல் பிரிவு நிபுணர் ஆவார்.

நாளை இயற்பியலுக்கான நோபல் பரிசும், நாளை மறுநாள் வேதியியலுக்கான நோபல் பரிசும், அமைதிக்கான நோபல் பரிசும் 7 ம் தேதியும், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வரும் 10ம் தேதியும் வழங்கப்படுகிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)