தொழிற்சாலைகள் பாதுகாப்பு படையில் பணி


          சிஐஎஸ்எப் என அழைக்கப்படும் துணை ராணுவ அமைப்பான மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படையில் நிரப்பப்பட உள்ள 441 கான்ஸ்டபிள், டிரைவர் (பின்னடைவு) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது.


         இது எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான சிறப்பு அறிவிப்பாகும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடியுரிமை பெற்ற எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு: 19.11.2016 தேதியின்படி 21 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் எல்எம்வி, எச்எம்வி, கியர் மோட்டார் சைக்கிள் லைசென்சு வைத்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, லட்சத்தீவு, புதுச்சேரி, தெலுங்கானா பகுதியை சேர்ந்த விண்ணப்பதாரர்கள், DIG, CISF (South Zone). Rajaji Bhawan, ‘D’ Block, Besant Nagar, Chennai, Tamilnadu 600090 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.11.2016

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)