இணையதளத்தில் ரேஷன் கார்டு :தீபாவளி முதல் அறிமுகம்
புதிய ரேஷன் கார்டுக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை, தீபாவளி முதல் துவக்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், நான்கு பிரிவுகளில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பித்த, 60 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும். ஆனால், பல மாதங்கள் ஆகியும் வழங்குவதில்லை. இதையடுத்து, புதிய ரேஷன் கார்டுக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை அமல்படுத்த, உணவு துறை முடிவு செய்தது. சோதனை ரீதியில் துவக்கிய இத்திட்டத்தை, தீபாவளி முதல், முழு வீச்சில் செயல்படுத்த, உணவு துறை திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதால், குறிப்பிட்ட காலத்துக்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்க முடிவதில்லை.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம், அனைத்து விபரங்களும், கம்ப்யூட்டரில் பதிவாகும் என்பதால், கார்டு வழங்க, தாமதம் செய்ய முடியாது. தாமதம் எங்கு என்பதையும் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க முடியும். இந்த திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தீபாவளிக்கு வெளியிட்டு, முழு அளவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
எப்படி விண்ணப்பிப்பது? : ரேஷன் கார்டு விரும்புவோர், 'tnpds.com' என்ற இணையதளத்தில், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் பகுதியில், 'கிளிக்' செய்ய வேண்டும்; கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் குடும்ப தலைவர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்; உறுப்பினர்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்; அதற்கான, ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் ரேஷன் கார்டு வகையை தேர்வு செய்ய வேண்டும். காஸ் சிலிண்டர் விபரம் பதிவு செய்ய வேண்டும்அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்ததும்,
விண்ணப்பதாரரின் மொபைல் போனுக்கு, தனி எண் வழங்கப்படும். அந்த எண்ணின் மூலம், ரேஷன் கார்டு நிலவரத்தை அறியலாம்.