இ-சேவை மையங்களில் வண்ண வாக்காளர் அடையாள அட்டை
தமிழ்நாடு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இணைய சேவை மையங்களில் வண்ண வாக்காளர் அடையாள அட்டையை விநியோகிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், வண்ண வாக்காளர் அடையாள அட்டையை வட்டாட்சியர் அலுவலகங்களில் மட்டுமே பெற முடியும் என்ற நிலை இருந்தது.
இப்போது, தமிழக அரசின் இணைய சேவை மையங்களிலும் வண்ண வாக்காளர் அடையாள அட்டையை ரூ.25 கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகத்தில் உள்ள 302 இணைய சேவை மையங்களில் 25 ஆயிரம் பேருக்கும், சென்னையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் வண்ண அடையாள அட்டைகளைப் பெற்றுள்ளனர்.
மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் அல்லது வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று கள ஆய்வு செல்வதைத் தவிர்க்கும் வகையில்,
TNELECTIONS என்ற செயலி வசதி சென்னை மாவட்டத்திலும், காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் வட்டத்திலும் உள்ள சில ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சோதனை அடிப்படையில் செய்து தரப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பத்திலுள்ள விவரங்கள் வாக்குச் சாவடி அலுவலரின் செல்லிடப்பேசியில் உள்ள செயலிக்கு அனுப்பி வைக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.