மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க சில குறிப்புகள்


 1 . சொல்லக் கேட்டு எழுதுதல்.
             (  உணவு இடைவேளையின் போது )     ஒரு மாறுதலுக்காக  வகுப்பறையில் உள்ள கரும்பலகையை தவிா்த்து வகுப்பறை வெளிச்சுவற்றில் ஒரு தாளில் எளிய வாக்கியம் ( புள்ளி மான் துள்ளி ஓடும்)   ஒன்றை எழுதி ஒட்டி விடலாம். 


         அதனைப் படித்துவிட்டு பாா்க்காமல் என் முன்பு எழுதிக்காட்ட  வேண்டும் என மாணவா்களிடம் கூறவும்.  இப்போது அனைவரும் ஆா்வத்துடன் அவ்வாக்கியத்தை படித்துவிட்டு நினைவில் நிறுத்தி நம் முன்னே எழுதிக் காட்டுவா்.
எழுத்துப் பிழையுள்ள சொல்லை வட்டமிட்டு, மீண்டும் எழுத சொல்ல , தாளை நோக்கி ஓடிச் சென்று,  எந்த இடத்தில் தவறு செய்தாா்களோ அதனை நன்கு கவனித்து மீண்டும் பிழையின்றி எழுதிக்காட்டுவாா்கள் .
           
இதுபோன்று செய்வதால் மாணவா்களிடையே  ஆா்வமும், புதிய அனுபவமும், நல்ல ஞாபகத்திறனும், பாா்க்காமல் எழுதும் திறனும் வளரும்.  நாளடைவில் ஆங்கில வாா்த்தைகள், சொற்றொடா்களை எழுத பயிற்சி அளிக்கலாம்.
          மெல்லக் கற்கும் மாணவா்க்கு தனியாக சொற்கள் எழுதி பயிற்சி அளிக்கலாம். 

      2.  நினைவாற்றலை வளர்க்க,,,,
              தொடக்க நிலை மாணவர்க்கு
பேனா, பென்சில், ரூபாய்த்தாள், நாணயம் முதலிய பொருட்களை ( 5 முதல் 7 வரை)  மாணவர்க்கு காட்டி நன்கு அவர்கள் பார்த்த பிறகு அவற்றை மூடி வைத்து விடவும். இப்போது அவர்களை ஒவ்வொருவராக அழைத்து மூடி வைத்ததில் என்னென்ன உள்ளது என கேட்க வேண்டும். நன்றாக படிக்கும் மாணவர்கள் உடனே சரியாக பதில் கூறுவார்கள். மெல்லக்கற்போர் ஒன்றிரண்டை விட்டு விட்டு கூறுவார்கள்.
அடுத்த சுற்றில் பொருட்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த, கண்டுபிடிப்பாளர்களும் பெயர்களை கூறுவதில் சற்று முன்னேறி இருப்பர்.
அடுத்த நாளில் பொருட்களுக்கு மாற்றாக வார்த்தை அட்டைகளை வைத்துமுயற்சி செய்யும் போது நினைவாற்றலும் கூடும், மேலும் அவ்வார்த்தை அட்டைகளை நாம் சொல்ல, மாணவர்கள் எழுதினால் பிழையின்றி எழுதி அசத்துவார்கள் 
       3.  விரைவாகப் படிக்கும் ஆா்வத்தை துாண்ட .. 
          வகுப்பு வாாியாக பாடப்புத்தகத்தில் குறிப்பிட்ட பக்கத்தைக் கூறி அதில் இடம் பெற்றுள்ள ஒரு சொற்றொடரை கண்டுபிடித்து படிக்க கூறவும். மாணவா்களிடையே பரபரப்பும், ஆா்வமும் தொற்றிக்கொள்ளும்.  போட்டி போட்டுக்கொண்டு அப்பத்தியில்  இடம் பெற்றுள்ள மொத்த வாக்கியங்களையும் படித்து - கண்டுபிடித்துவிடுவாா்கள். தொடா்ந்து இம்முறையை பின்பற்ற, விரைவாகப் படிக்கும் திறன் அவா்களிடையே தானாக உருவாகும்.
        மெல்லக்கற்கும் மாணவா்க்கு மேற்குறிப்பிட்ட முறையில் ஒரேயொரு சொல்லைக் கூறி பயிற்சி அளிக்கலாம்.
            அனைத்தையும் போட்டி முறையில் வழிநடத்த சிறப்பான முடிவு கிடைக்கும். 
       நன்றி.... 
ப. ரகுபதி  இநிஆ
வேப்பனப்பள்ளி

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)