இயற்கை பாதுகாப்பு விருது விண்ணப்பிக்க அழைப்பு!!


      பள்ளி, கல்லுாரிகள் மற்றும் தனி நபர்களுக்கு, இயற்கை பாதுகாப்பு சங்கம் சார்பில் விருது வழங்கப்படுகிறது.
         பள்ளிகளில் சுகாதாரம், நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பேணுதல், வன உயிரினங்கள் பாதுகாத்தல்,   மாணவர்க
ளுக்கான இயற்கை முகாம், மரம் வளர்ப்பு உள்ளிட்ட பசுமை பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்க இயற்கை பாதுகாப்பு சங்கம் விருது வழங்குகிறது.

          போட்டியில், துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள், கல்லுாரிகள் சார்பிலும், தனி நபர்களும் கலந்து கொள்ளலாம். கோவை, திருப்பூர் மாவட்ட பழங்குடியின மாணவர் பள்ளிகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படுகிறது.

          பள்ளி, கல்லுாரிகளிலும், தனி நபராகவும் சுற்றுச்சூழல் மேம்பாடு, இயற்கை பாதுகாப்பு, மரம் வளர்ப்பு என, மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நிபுணர்கள் ஆய்வு செய்து, விருதுக்குரிய பள்ளிகள், கல்லுாரிகளை தேர்வு செய்வார்கள். விருதுக்கான போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லுாரிகள் 98941 98078 என்ற மொபைல்போன் எண்களிலும், ncs.cbe@gmail.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்கள் வரும், 15ம் தேதி வரை பெறப்படும். இத்தகவலை, இயற்கை பாதுகாப்பு சங்க தலைவர் ஜலாலுதீன் தெரிவித்தார்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)