ஆங்கிலம் அறிவோமே - சில சொற்கள் சில பொருட்கள்

ஆங்கிலம் அறிவோமே - சில சொற்கள் சில பொருட்கள்
Scent என்ற வார்த்தையில் எது silent letter? ‘s’ஆ, அல்லது ‘c’ஆ?

Forceful, forcible ஆகிய இரண்டு சொற்களின் அர்த்தமும் ஒன்றா என்று கேட்டால் இல்லை, இல்லை என்றுதான் forceful ஆகக் கூற முடியும்.



Forceful என்றால் அது வேகத்தைக் குறிக்கிறது. The water from the pump was forceful. He is a man of forceful personality and strong opinions.

Forcible என்பது imposing என்ற அர்த்தம் கொண்டது. அதாவது பலத்தைப் பயன்படுத்திச் செய்யப்படும் ஒரு செயல். He made a forcible entry. The police made a forcible removal of the demonstrators.

சினிமாக் கதாநாயகர்களின் அறிமுகக் காட்சி என்பது forceful entry ஆக இருக்கும். இது ரசிகர்களை ரசிக்கவைக்கும். Forcible entry என்றால் கதவுக்கு ஏதோ பாதிப்பு நேர்ந்திருக்க வாய்ப்பு உண்டு!



‘AKA’ என்றால் என்ன பொருள்? இதற்குப் பொருள் விளங்காமல் தலை சுற்றுகிறது என்கிறார் ஒரு வாசகர்.

நண்பரே, சுற்றும் பூமியில் வசிக்கும்போதே சுற்றாத தலை AKAவின் அர்த்தம் புரியாததற்குச் சுற்றலாமோ?

Also Known As என்ற மூன்று வார்த்தைகளின் தொடக்க எழுத்துகளைச் சேர்த்தால் வருவதுதான் AKA. அதாவது தமிழ்த் திருமண அழைப்பிதழ்களில் சுபாஷினி என்ற சுப்புலட்சுமி என்றெல்லாம் குறிப்பிடுவார்களே அதை சுபாஷினி AKA சுப்புலட்சுமி என்று எழுதலாம்.

சில சமயம் கிண்டலாகக்கூட AKA பயன்படுத்தப்படுகிறது. My Cousin Jegan AKA the worst gossip monger has arrived.

அதாவது alias என்பதற்குப் பதிலாக AKA அப்படித்தானே என்று கேட்கிறீர்களா? அப்படித்தான்.

Alias என்பது லத்தீன் வார்த்தை.

இதற்கு மற்றபடி, வேறொரு சமயம் ஆகிய பொருள்கள் உண்டு. ஆனால் அது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும்போது ஒருவரின் மற்றொரு அறியப்பட்ட பெயரையும் குறிக்கிறது.



“I can able to do this work’’ என்று என் நண்பன் கூற, அதை நான் தவறு என்கிறேன். அவன் மறுக்கிறான். Can, able to ஆகிய இரண்டு வார்த்தைகளும் ஒரே வாக்கியத்தில் அடுத்தடுத்து இடம் பெறலாமா, கூடாதா?

வாசகர் ஒருவரின் மேற்கூறிய கேள்விக்கு இப்படி விளக்கம் அளிக்கலாம். Can, able to ஆகிய இரண்டுமே முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் சொற்கள்தான். சில இடங்களில் மட்டும் ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பயன்படுத்த முடியும்.

Can என்பது present tenseல் பயன்படுத்தப்படுகிறது. I can speak English well. They can drive.

Able to என்பது கொஞ்சம் formal ஆன பயன்பாடு.

கடந்த காலம் தொடர்பானது என்றால் can என்பதை could என்று மாற்றியும், able to என்பதற்கு முன்னதாக was அல்லது were ஆகிய வார்த்தைகளைச் சேர்த்தும் பயன்படுத்த முடியும். He could write when he was three. He was able to write when he was three.

கடந்த காலத்தில் சில குறிப்பிட்ட நிகழ்வுகளில் நாம் செய்தவற்றைக் குறிப்பிடும்போது could என்பதைப் பயன்படுத்த முடியாது. After climbing for many hours, we were able to get to the top of the mountain. இங்கே we could get to the top of the mountain என்று குறிப்பிடுவதில்லை.

ஆனால் இதுபோன்ற எதிர்மறையான வாக்கியங்களைக் குறிக்க இரண்டையும் பயன்படுத்தலாம். In spite of climbing for many hours, we could not get to the top of the mountain. In spite of climbing for many hours, we were not able to get to the top of the mountain.

Can, able to ஆகிய இரண்டையுமே ஒரே வாக்கியத்தில் அடுத்தடுத்துப் பயன்படுத்தக் கூடாது.



Invaluable என்றால் என்ன அர்த்தம்?

மதிப்பில்லாததா மிகவும் மதிப்பு குறைந்ததா என்ற கேட்கும் வாசகருக்கு இதுதான் பதில்:

விலை மதிப்பற்றது என்று பொருள். அதாவது மிக மிக மதிப்பு கொண்டது.

அப்படியானால் விலையில்லா என்று அடைமொழியுடன் அரசு அளிக்கும் பொருள்கள் invaluable ஆ இல்லையா என்று கேட்டுவிடாதீர்கள்.



‘கேட்டாரே ஒரு கேள்வி’பகுதியில் வெளியிட்டிருக்கும் கேள்விக்கு என்னதான் விடை?

‘Sent’ என்பதை ஸென்ட் என்றுதான் உச்சரிக்கிறோம். அப்படியானால் Scent என்ற வார்த்தையில் ‘c’ என்பது silent letter என்றாகிறது

Cent என்ற நாணயத்தை ஸென்ட் என்போம். அப்படியானால் scent என்ற வார்த்தையில் ‘s’ என்பது silent letter என்று தோன்றுகிறது.

அப்படியானால் இந்த இரண்டில் எதுதான் silent letter?

இந்தக் கேள்விக்கான சுவையான, வித்தியாசமான பதில்களை வாசகர்கள் எழுதி அனுப்பலாமே.

கூடவே கிலியுடன் வேறொரு வேண்டுகோளையும் முன்வைக்கிறேன். எந்த வாசகரும் ‘Fridge’ வார்த்தையில் ‘d’ இருக்கிறதே, ‘refrigerator’ என்ற வார்த்தையில் மட்டும் ‘d’ இல்லையே. இது ஏன் என்று கேட்டுவிடாதீர்கள்.

போட்டித் தேர்வில் கேட்டுவிட்டால்...

You do not like me, --------------?

கோடிட்ட இடத்தில் இடம் பெறவேண்டிய வார்த்தைகள் எவை?

a) Can you

b) Did you

c) Do you

d) Don’t you

Can you என்பது பொருந்தாத ஒன்று. உனக்கு என்னைப் பிடிக்காது என்பதற்குப் பின் can you என்பது எப்படிப் பொருள் தரமுடியும்?

Do not என்பது present tense தொடர்பானது என்பதால் Did you என்ற past tense இதைத் தொடராது.

Do you வருமா, Don’t you வருமா என்பது குறித்துப் பார்ப்போம்.

ஒரு தகவல் அல்லது கருத்தைத் தொடர்ந்து இறுதியில் அதே வாக்கியத்தில் அதைப் பற்றிய ஒரு கேள்வி வந்தால் அதை tag என்பார்கள். இதுபோன்ற tag கேள்விகள் ஆங்கிலத்தில் சகஜம்.

இதில் மற்றொன்றையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நேர்மறைக் கருத்து என்றால் அதைத் தொடரும் tag கேள்வி எதிர்மறையாக இருக்க வேண்டும். எதிர்மறைத் தகவல் அல்லது கருத்து என்றால் tag கேள்வி நேர்மறை (பாசிடிவாக) இருக்க வேண்டும்.

You live in Mumbai, don’t you? என்பதுதான் சரி

அதேபோல You have not seen the film, have you? என்பதுதான் சரி.

You live in Mumbai, do you? என்பது தவறு. You have not seen the film, have not you? என்பது தவறு.

மேலே உள்ளவற்றை மனதில் கொள்ளும்போது கொடுக்கப்பட்ட கேள்வியில் உள்ள தொடக்கக் கருத்து எதிர்மறையாக இருக்கிறது. எனவே நேர்மறை tag questionதான் சரியானது. அதாவது You don’t like me, do you? என்பதே சரி.

சிப்ஸ்

# ‘The students will dialogue with the Dean’ என்று குறிப்பிடுவது சரியா?

Dialogue என்பதை verb ஆகப் பேச்சு வழக்கில் இப்படிப் பயன்படுத்துகிறார்கள். Will discuss என்பது பொருத்தமாக இருக்கும்.

# பாகிஸ்தான் குறித்த சமீப செய்திகளில் நம் ராணுவம் ‘Drone surveillance’ செய்ய வேண்டும் என்று படித்தேன். அதற்கு அர்த்தம் என்ன?

Surveillance என்றால் கண்காணிப்பு. Drone என்றால் ஆளில்லாத விமானம். தரையிலிருந்து ரிமோட்டால் இயக்கப்படுவது.

# Duck என்பது ஆண் வாத்து, பெண் வாத்து இரண்டையும் குறிக்குமா?Duck என்பது பெண் வாத்து. Drake என்பது ஆண் வாத்து. (ஆக பேட்ஸ்மேன்களுக்குப் பெண் வாத்து என்றால்தான் அலர்ஜி!)

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)