விடைத்தாள் எழுதும் முறை : வழிகாட்டுமா தேர்வு துறை?
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற, மாணவர்கள் கடும் முயற்சி மேற்கொள்கின்றனர். சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வில், விடைத்தாளில் பதில் எழுதுவது குறித்து, பள்ளிகளில் பல வழிமுறைகளை கற்று கொடுத்துள்ளன
ர்.
'விடைத்தாளின் ஒவ்வொரு பக்கத்திலும், பெரிய எழுத்துக்களால் எழுத வேண்டும். நீல நிற பேனாவை பயன்படுத்த வேண்டும்; கருப்பு வண்ண, 'ஸ்கெட்ச்' அல்லது பேனாவால், முக்கிய பாகங்களை கோடிட்டு காட்ட வேண்டும். விடைத்தாளின் பின்பக்கத்திலுள்ள, செய்முறை பயிற்சி பக்கத்தில், எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்; அந்த பக்கம் கணக்கில் கொள்ளப்படாது' என, வழிமுறைகள் கூறப்பட்டு உள்ளன. இதற்கிடையில், விடைத்தாளில் கோடுகள் போடலாமா; முக்கிய பகுதிகளை, வண்ண பேனா அல்லது கருப்பு பேனாவால் குறிக்கலாமா என, பெற்றோர் குழப்பமடைந்து உள்ளனர். மாணவர்களுக்கு தற்போது அளிக்கப்படும் வழிமுறைகள், பொதுத்தேர்வில் தடை செய்யப்பட்டால், மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
எனவே, 'தற்போதே விடைத்தாளில் எழுதும் முறை பற்றியும், செய்யக்கூடாதவை பற்றியும், அறிவிப்பு வெளியிட வேண்டும்' என, பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.