பயணிகளின் மொபைல் போனுக்கு இன்சூரன்ஸ் : ரயில்வே அதிரடி தொடர்கிறது


          ரயிலில், முன்பதிவு செய்து, பயணம் செய்பவர்களுக்கு, 92 பைசாவில், 10 லட்சம் ரூபாய் பயணக் காப்பீடு வழங்கும் திட்டம் பெரும் வரவேற்பு பெற்றதால், பயணிகளின் மொபைல் போன் மற்றும் லேப் - டாப்களுக்கு, இன்சூரன்ஸ் வழங்கும்
திட்டத்தை, விரைவில் அறிமுகம் செய்ய, ரயில்வே தீர்மானித்துள்ளது.
பயண காப்பீடு :
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, ரயில் களில் பயணிப்போருக்காக, 92 பைசாவில் பயணக் காப்பீடு வழங்கும் திட்டம், செப்., 1ல், அமலுக்கு வந்தது. இதன்படி, ஆன்லைன் டிக் கெட் முன்பதிவில், விருப்பத் தேர்வாக இருக்கும். இந்த பயணக் காப்பீடுதிட்டத்தில், கட்டணத்துடன் கூடுதலாக, 92 பைசா செலுத்தி, பயணக் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். 
ரயில் விபத்து அல்லது பயங்கரவாத தாக்குத லில் பயணக் காப்பீடு எடுத்துள்ள பயணிகள், 
பலியானாலோ அல்லது முழுமையாக செயல் படாத அளவுக்கு ஊனமடைந்தாலோ, அவர் களின் குடும்பத்தினருக்கு, 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும். 
இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து, ரயில்பயணத்தின் போது, பயணிகள் எடுத்துச் செல்லும் மொபைல் போன், லேப் - டாப் போன்ற வற்றுக்கும், இன்சூரன்ஸ் வழங்குவது குறித்து, ரயில்வே பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக, இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன், ரயில்வேயின் சார்பு நிறுவன மான, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் நிர்வாக இயக்குனர், ஏ.கே.மனோச்சா ஆலோசனை நடத்தினார். 
மக்கள் ஆதரவு :
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பயண இன்சூரன்ஸ் திட்டத்தில், இதுவரை, ஒரு கோடி பயணிகள், இணைந்துள்ளனர். இந்த வெற்றியை தொடர்ந்து, ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் கொண்டு செல்லும், மொபைல் போன், லேப் - டாப்போன்றவற்றுக்கு இன்சூரன்ஸ் வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்; 
இதன்படி, விபத்து அல்லது கொள்ளை போனால் இழப்பீடு வழங்கப்படும். இது தொடர் பாக, இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் பேசியுள் ளோம்; அப்போது, போலியாக பலர், இழப்பீடு கோரும் ஆபத்து இருப்பதாக, இன்சூ ரன்ஸ் நிறுவனங்கள் 
கவலை தெரிவித்தன. எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் கிரெடிட் கார்டுவைத்திருக்கும் ரயில் பயணிகளுக்கு, முதல் கட்ட மாக, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்; பின், மற்ற பயணி களுக்கும் விரிவுபடுத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
தீபாவளி சலுகை :
தீபாவளி பண்டிகையை ஒட்டி, அதிரடி, 'ஆபர்' ஆக, ரயில் பயணிகளுக்கான பயண இன்சூ ரன்ஸ் பிரீமியம், 92 பைசாவில் இருந்து, ஒரு பைசாவாக குறைக்கப்படுகிறது; அக்டோபர், 7 முதல், 31 வரை மட்டும், இச்சலுகை வழங்கப் படும். அதிகமான ரயில் பயணிகளை ஈர்க்கவே, இச்சலுகை வழங்கப்படுவதாக ரயில்வே கூறியுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)