மாணவர்களுக்கு கவுன்சலிங் தர மாவட்டத்துக்கு 100 ஆசிரியர்கள்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர் முழு ஆண்டுத்தேர்வில் தோல்வி அடைந்தாலோ, மதிப்பெண் குறைந்தாலோ தற்கொலையில் ஈடுபடுவது அதிகரித்து வ
ருகிறது.
இதனை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை, சமூக பாதுகாப்புத்துறை இணைந்து ஆசிரியர்கள் மூலம் பள்ளி அளவில் மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
பயிற்சி பெறும் ஆசிரியர்கள் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு கவுன்சலிங் அளிப்பர். ஆசிரியர்களுக்கான பயிற்சி விரைவில் அளிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.