குரூப்-1 தேர்வு: அதிரடி நிபந்தனைகள்!!!


தமிழகத்தில் காலியாகவுள்ள 85 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பி
எஸ்சி) நேற்று தெரிவித்துள்ளது.துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், பல்வேறு துறைகளில் உள்ள உதவி ஆணையர்கள் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதன்படி விண்ணப்பிக்க விரும்புவோர் நேற்றிலிருந்து டிசம்பர் 8ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி இதற்கான தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து தேர்வெழுதுவோருக்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.‘தேர்வர்கள் யாரும் சிபாரிசுக்காக தேர்வாணைய தலைவர், செயலர், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரைச் சந்திக்கக்கூடாது.

சந்திக்க முயற்சித்தால், அவர்கள் தேர்வு எழுத தடை. விடைத்தாளில் பெயர், பதிவெண் போன்றவற்றை நேரடியாகவோ, குறிப்பாகவோ தேவையற்ற இடங்களில் எழுதினால் எதிர்காலத்தில் தேர்வு எழுத தடை.அனுமதிக்கப்பட்ட பேனாவை தவிர, பென்சில், வண்ண பென்சில், வண்ண பேனா கிரயான்கள், ஒயிட்னர், ஸ்கெட்ச் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது. வினாத்தாள் மற்றும் விடைத்தாளில், பொது அறிவுரையில் குறிப்பிட்டபெயர், சுருக்கொப்பம், முகவரி தவிர மற்ற பெயர், கையொப்பம், சுருக்கொப்பம், தொலைபேசி, மொபைல் போன் எண்,முகவரி மற்றும் மதம் சார்ந்த குறியீடு இடுதல் கூடாது.விடைத்தாளில், பரிவு தேடும் விதத்தில் கெஞ்சி கேட்டு எழுதுவது கூடாது. கேள்விக்கு தொடர்பில்லாத பாடம், பதில்கள் மற்றும் தன் அடையாளத்தை வெளியிடும் வகையில்எழுதக்கூடாது. கறுப்பு அல்லது நீலம் இரண்டு வகை பேனாவில், ஏதாவது ஒன்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இரண்டிலும், மாற்றி மாற்றி எழுதினால் அந்த விடைத்தாள் தகுதி நீக்கம் செய்யப்படும். தேர்வர்கள் மின்னணு தகவல்கள் அடங்கிய ஸ்மார்ட் வாட்ச், மோதிரம், கம்யூனிகேஷன் சிப், மொபைல்போன், பல விவரங்கள் உடைய கால்குலேட்டர்களை தேர்வில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்வர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் உடையவராக இருத்தல் கூடாது. விண்ணப்பதாரர் பெண்ணாக இருந்தால், ஏற்கனவே மனைவியுடன் வாழும் ஒருவரை திருமணம் செய்திருக்கக் கூடாது’ என்று டிஎன்பிஎஸ்சி அதிரடியாக பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

இந்த நிபந்தனைகளை கடைபிடிக்காதவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank