குரூப் - 1 தேர்வு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இலவச பயிற்சி வகுப்பு


          டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 தேர்வு மற்றும் தபால் துறை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில், பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட உள்ள
ன.

       இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர், சுப்பையன் வெளியிட்டு உள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், 85 காலிப் பணியிடங்களை நிரப்ப, குரூப் - 1 முதன்மை தேர்வை, பிப்., 19ல் நடத்த உள்ளது. இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு, அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும், துவக்கப்பட உள்ளது. இதில், பாடவாரியான வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்;
பாடக்குறிப்புகளும் வழங்கப்படும். எனவே, தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், தங்களின் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். அதேபோல், தபால் துறையில், 5,014 காலியிடங்களை நிரப்ப, மேல்நிலைப் பள்ளி அளவிலான தேர்வு, 2017 ஜன., 7 முதல் பிப்., 5 வரை நடக்க உள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகளும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில், துவக்கப்பட உள்ளன.இவ்வாறு சுப்பையன் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)