ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு எழுத டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்


        ஐ.ஐ.டி., என்ற உயர்கல்வி தொழில்நுட்ப கல்லுாரிகளில் இன்ஜினியரிங் படிப்பதற்கான, ஜே.இ.இ., மெயின் நுழைவுத் தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்.


         ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.டி.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., மற்றும் பி.பிளான் போன்ற படிப்புகளில் சேர, ஜே.இ.இ., மெயின், அட்வான்ஸ் என்ற, இரண்டு கட்ட நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு, சி.பி.எஸ்.இ., மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது. 


இதன்படி, ஏப்., 3ல் எழுத்துத் தேர்வும், ஏப்., 9, 10ல், ஆன்லைன் வழி தேர்வும் நடத்தப்படுகிறது. இதற்கு, டிச., 1 முதல், 31 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வில் பங்கேற்க, தமிழக அரசு பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., உட்பட, 54 பாடத்திட்ட மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உட்பட நாடு முழுவதும், 132 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. வெளிநாட்டில் இருப்போர், ஜே.இ.இ., மெயின் தேர்வை எழுத, துபாய், பக்ரைன், மஸ்கட், ரியாத் மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

குஜராத்தியில் எழுதலாம் : ஜே.இ.இ., மெயின் தேர்வை, ஆங்கிலம் அல்லது இந்தி என, ஏதாவது ஒரு மொழியில் எழுத அனுமதி உள்ளது. தமிழிலும், இத்தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு முதல் குஜராத்தியிலும், ஜே.இ.இ., தேர்வை எழுதலாம் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர் உட்பட, பல மாவட்டங்களில் குஜராத்தி மொழி பேசுவோர் பரவலாக உள்ளனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)

RTI Letter Application - SG Asst 750 pp regarding