2-ஆம் ஆண்டு பியூசி தேர்வு: அடுத்த ஆண்டு மார்ச் 11 முதல் தொடங்குகிறது.


      2-ஆம் ஆண்டு பியூசி தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.


         இதுகுறித்து பியூ கல்வித் துறை வெளியிட்ட செய்தி: 2016-17-ஆம் கல்வியாண்டுக்கான 2-ஆம் ஆண்டு பியூசி பொதுத் தேர்வு நடத்தப்படும் வரைவு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. 
அதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் 9 முதல் 27-ஆம் தேதி வரை தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது.இந்த தேர்வு அட்டவணை குறித்து பொதுமக்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருந்தால், அதுகுறித்து இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் பியூ கல்வித் துறைக்கு முறையாக தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மக்களின் கருத்தறிந்த பிறகு, பொதுத் தேர்வுக்கான இறுதி கால அட்டவணை அடுத்த மாத தொடக்கத்தில் வெளியிடப்படும்.

பொதுமக்களின் பார்வைக்காக www.pue.kar.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்வு தேதியும், பாடமும் வருமாறு:
2017, மார்ச் 9 (வியாழன்)-உயிரியல், வரலாறு, மார்ச் 10 (வெள்ளி)-மின்னணுவியல், கணினி அறிவியல், மார்ச் 11 (சனி)-கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, மார்ச் 13 (திங்கள்)-சமூகவியல், கணக்குப் பதிவியல், மார்ச் 14(செவ்வாய்)-கணிதம், மார்ச் 15 (புதன்)-கல்வி, தருக்கவியல், மார்ச் 16 (வியாழன்)-பொருளாதாரம், நில அமைப்பியல், மார்ச் 17 (வெள்ளி)-இயற்பியல், மனநலவியல், மார்ச் 18(சனி)-சம்ஸ்கிருதம், மராத்தி, உருது, பிரெஞ்ச், மார்ச் 20(திங்கள்)-வேதியியல், வணிக ஆய்வு, மார்ச் 21(செவ்வாய்)-அரசியல் அறிவியல், அடிப்படை கணிதம், மார்ச் 22 (புதன்)-ஹிந்தி, தெலுங்கு, மார்ச் 23 (வியாழன்)-கன்னடம், தமிழ், மலையாளம், அராபிக், மார்ச் 24 (வெள்ளி)-சிறப்பு கன்னடம், மனை அறிவியல், மார்ச் 25 (சனி)-புள்ளியியல், புவியியல், மார்ச் 26 (ஞாயிறு)-விடுமுறை, மார்ச் 27 (திங்கள்)- ஆங்கிலம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)