'குரூப் - 2 ஏ' கவுன்சிலிங் வரும் 21ம் தேதி துவக்கம் - டிசம்பர் 4 வரை நடக்கிறது : .என்.பி.எஸ்.சி., அறிவிப்பு


         'குரூப் - 2 ஏ பதவிகளுக்கான பணி நியமன கவுன்சிலிங், வரும், 21 முதல் டிச., 2 வரை நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 


இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர் பணிக்கு, 1,863 காலியிடங்களை நிரப்ப, ஜன., 24ல், 'குரூப் - 2 ஏ' எழுத்துத் தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், ஜூன், 8ல் வெளியாகின. வெற்றி பெற்றோருக்கு, ஜூலை, 4 முதல், 19 வரை, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.
பணி நியமன கவுன்சிலிங், வரும், 21 முதல் டிச., 2 வரை, சென்னையிலுள்ள, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கும். அழைப்பு கடிதம் குறித்த விபரங்களை தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)