ஆங்கிலத் திறனை மேம்படுத்த 35 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சியாளர்கள் மூலம் ஆங்கிலத் திறனை மேம்படுத்த 35 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் தகவல்

ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சியாளர்கள் மூலம் 35 ஆயிரம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்எஸ்ஏ) மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி தெரிவித்தார். பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் யுனிசெஃப் உதவியுடன் அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் சிறப்புப் பயிற்சி திட்டத்தை எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநரகம் மேற்கொண்டு வருகிறது. 
முதல்கட்டமாக வட்டார வள மைய (பிஆர்டி) ஆங்கில ஆசிரியர் பயிற்றுநர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்கள் மூலமாக இதர ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பதுதான் இந்த திட்டம். கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு
வரும் இந்த பயிற்சி திட்டத்தில் ஆர்வமும், திறமையும் மிக்க 300 ஆங்கில ஆசிரியர் பயிற்றுநர்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சியாளர் களைக் கொண்டு பயிற்சி அளிக் கப்படுகிறது. அதன்படி, முதல் கட்ட, 2-ம் கட்ட பயிற்சிகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 3-வது கட்ட பயிற்சி சென்னையில் நேற்று தொடங்கியது. இப்பயிற்சியை எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி தொடங்கிவைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த பயிற்சி திட்டமானது வெறுமனே ஆங்கில பயிற்சி அளிக்கும் திட்டம் மட்டுமல்ல. ஆங்கில ஆசிரியர்களின் பாடம் நடத்தும் திறமையை மேம்படுத்தும் திட்டமும் கூட. 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் பலன்களை நன்றாக பார்க்க முடிகிறது. பயிற்சியின் பலன் பள்ளி மாண வர்களை நல்லமுறையில் சென் றடைந்திருக்கிறது. அவர்களின் ஆங்கில மொழித்திறனில் நல்ல முன்னேற்றத்தை காணமுடிகிறது. இந்த ஆங்கில பயிற்சியானது பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கும் நல்ல கற்றல் அனுபவத்தை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். பிரிட்டிஷ் கவுன்சில் இந்தியா இயக்குநர் ஆலன் கெம்மல் ஓப் பேசும்போது, "கல்வித்துறையில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே 70 ஆண்டு காலமாக உறவு இருந்து வருகிறது. கல்வி யில் இருநாடுகளும் இணைந்து செயல்படும் வகையில் பல் வேறு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இன்றைய சூழலில் கல்வித்துறை யில் புதுமையை புகுத்த வேண்டியது அவசியம் ஆகும். அதற்கான முயற்சியில் பிரிட்டிஷ் கவுன்சில் இறங்கியுள்ளது. அந்த வகையில், ஆங்கிலப் பயிற்சி தொடர்பாக எஸ்எஸ்ஏ திட்டத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் இந்தியாவில் 9 லட்சம் பேருக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது" என்றார். பிரிட்டிஷ் கவுன்சில் தென்னிந்திய இயக்குநர் மெய் க்வாய் பார்க்கர் ஆங்கில பயிற்சி திட்டம் குறித்து அறிமுகவுரை ஆற்றினார். ஆங்கிலப் பயிற்சி யால் ஆசிரியர்கள் மற்றும் மாண வர்களிடம் ஏற்பட்டுள்ள முன்னேற் றங்களையும் மாற்றங்களையும் யுனிசெப் கல்வி நிபுணர் அருணா ரத்தினம் எடுத்துரைத்தார்.
ஆசிரி யர்களின் திறமையை மேம்படுத்த அதிகளவு செலவிடுவதற்கு எஸ்எஸ்ஏ இயக்ககத்துக்கு பாராட்டு தெரிவித்தார். எஸ்எஸ்ஏ முதுநிலை கல்வி ஆலோசகர் மாலதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பயிற்சி தொடக்கவிழா முடி வடைந்த பிறகு பூஜா குல்கர்னி நிருபர்களிடம் பேசும்போது, ''இந்த ஆங்கில பயிற்சிக்கு 300 ஆசிரியர் பயிற்றுநர்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக் கிறார்கள். ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி ஆகியவற் றுடன் ஆங்கிலத்தை எப்படி எளிதான முறையில் கற்றுக்கொடுப் பது என்பது குறித்தும், மற்ற ஆசிரியர்களுக்கு எப்படி பயிற்சி அளிக்க வேண்டும் என்பது பற்றியும் பயிற்சியில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. பயிற்சி பெறும் இந்த 300 ஆசிரியர் பயிற்றுநர் களைக் கொண்டு இதர ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் ஆசிரியர் களுக்கும் பயிற்சி அளிக்கப்படு கிறது. இந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பணியாற்றும் 35 ஆயிரம் ஆங்கில ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்'' என்றார். எஸ்எஸ்ஏ, பிரிட்டிஷ் கவுன்சில், யுனிசெப் சார்பில் சென்னையில் நேற்று தொடங்கிய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான ஆங்கில பயிற்சி தொடக்க விழாவில் (இடமிருந்து) யுனிசெப் கல்வி நிபுணர் அருணா ரத்தினம், பிரிட்டிஷ் கவுன்சில் தென்னிந்திய இயக்குநர் மெய் க்வாய் பார்க்கர், இயக்குநர் ஆலன் கெம்மல் ஓப், எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, முதுநிலை கல்வி ஆலோசகர் மாலதி.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022