தேசிய சாப்ட்வேர் கொள்கை வெளி­யீடு:35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!!!


       மத்­திய அரசு, தேசிய சாப்ட்வேர் கொள்கை குறித்த வரை­வ­றிக்­கையை வெளி­யிட்டு உள்­ளது. 


        அதில், 2025ல், சர்­வ­தேச சாப்ட்வேர் சந்­தையில், இந்­தி­யாவின் பங்­க­ளிப்பை, 10 மடங்கு உயர்த்தி, 14,800 கோடி டால­ராக அதி­க­ரிக்­கவும்; உள்­நாட்டில், 35 லட்சம் வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கவும்,

இலக்கு நிர்­ண­யித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. சாப்ட்­வேர்­களை உரு­வாக்க, 10 ஆயிரம் தொழில்­நுட்ப ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்கள் அமைக்­கப்­படும் எனவும், வரை­வ­றிக்­கையில் கூறப்­பட்டு உள்­ளது.
சர்­வ­தேச சாப்ட்வேர் துறையின் சந்தை மதிப்பு, தற்­போது, 41,100 கோடி டால­ராக உள்­ளது. இது, வரும், 2025ல், 1 லட்சம் கோடி டால­ராக உயரும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இந்­திய சாப்ட்வேர் துறையின் வருவாய், 610 கோடி டால­ராக உள்­ளது. இதில், 200 கோடி டாலர், ஏற்­று­மதி மூலம் கிடைக்­கி­றது. இந்­திய, ஐ.டி., துறையின் சந்தை மதிப்பு, 14,300 கோடி டால­ராக உள்­ளது. இது, 2025ல், 35 ஆயிரம் கோடி டால­ராக உயரும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022