இன்று நள்ளிரவு முதல் ₹500 ,₹1000 செல்லாது-பிரதமர் அறிவிப்பு (விரிவான செய்தி)

டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். நாட்டு மக்களுடன் பல முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புவதாக மோடி தெரிவித்தார். 

உலக பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக சர்வதேவ செலவாணி நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளதாக மோடி தெரிவித்தார். ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காகவே தமது அரசு அர்ப்பணிப்புடன் பாடுபடுவதாக தெரிவித்த மோடி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே தமது அரசின் இலக்காகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 
மேலும் ஊழலும், கருப்பு பணமும் நாட்டின் உறுதி நிலையை சீர்குலைப்பதாக மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். வறுமையை ஒழிப்பதே தமது அரசின் குறிக்கோள் என்றும், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மோடி தெரிவித்தார். 1.25 லட்சம் கோடி கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார். எல்லைக்கு அப்பால் உள்ளவர்கள் தீவிரவாதிகளுக்கு பண உதவி அளித்து வருவதாகவும்,  பயங்கரவாதிகளுக்கு கொடுக்க எதிரிகள் கள்ள நோட்டுகளை அச்சிடுவதாகவும், பாகிஸ்தானை பிரதமர் மோடி மறைமுகமாக சாடினார். தவறுகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது என மோடி தெரிவித்தார். 
இன்று இரவு 12 மணி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருவோர் அடையாள அட்டை காட்ட வேண்டும், இதற்காக வங்கிகளில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்படும் என்று மோடி தெரிவித்தார். மேலும் நாளையும், நாளை மறுநாளும் ஏ.டி.எம். வேலை செய்யாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நவம்பர் 10 முதல் வங்கி மற்றும் தபால் நிலையங்களிலும் ஒப்படைக்கலாம் என்றும், வங்கிகள் ஏற்றுக் கொள்ளாத பணத்தை ரிசர்வ் வங்கியில் கொண்டு மாற்றி கொள்ளலாம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
*இன்று இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது
*500, 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்
*500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருவோர் அடையாள அட்டை காட்ட வேண்டும்
*டிசம்பர் 30-ம் தேதிக்குள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம்
*டிசம்பருக்கு பிறகு கையிருப்பில் ரூ.500, 1000 நோட்டுகளை மாற்ற முடியாது
*நாளையும், நாளை மறுநாளும் ஏ.டி.எம். யைமங்கள் வேலை செய்யாது
*அரசு மருத்துவமனைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை நவம்பர் 11-ம் தேதி வரை வாங்கி கொள்வார்கள்
*அஞ்சலகங்களிலும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை 100 நோட்டுகளாக மாற்றலாம்
*நவம்பர் 11-ம் தேதி வரை பெட்ரோல் பங்குகள் ரயில் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டு செல்லும்
*விமான நிலையங்களிலும் ரூ.500, 1000 நோட்டுகள் நவம்பர் 11-ம் தேதி வரை செல்லும் என அறிவிப்பு
*அனைத்து வங்கிகளும் நாளை விடுமுறை என பிரதமர் மோடி அறிவிப்பு
*பழைய நோட்டுகளை பெற்றுக் கொண்டு புதிதாக ரூ.500 மற்றும், ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்படும்
*மத்திய அரசின் நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022