69 ஆண்டுகளுக்கு பின் இன்று சூப்பர் பவுர்ணமி


          இயற்கை நிகழ்த்தும் அதிசயங்களில் ஒன்றாக, 69 ஆண்டுகளுக்கு பின், 30 சதவீதம் அதிக ஒளியை உமிழும், சூப்பர் புவுர்ணமி நிலா, இன்று வானில் தோன்றுகிறது;


          இதை, வெறுங்கண்களால்பார்க்கலாம்.ஆண்டு தோறும், சூப்பர் நிலா காட்சி தோன்றினாலும், இதன் ஒளி உமிழும் தன்மை வெவ்வேறாக இருக்கும்.அதிகபட்சமாக, 30 சதவீத ஒளியை உமிழும் வகையில், சூப்பர் நிலா, 1948 ஜனவரியில் தோன்றியது. 69 ஆண்டுகளுக்கு பின், அதே பிரகாசத்துடன், சூப்பர் பவுர்ணமி நிலா இன்று தோன்றுகிறது. 


இதுகுறித்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர், அய்யம் பெருமாள் கூறியதாவது:பூமியிலிருந்து, நான்கு லட்சத்து, 2,600 கி.மீ., துாரத்தில், நிலா சுற்றி வரும். ஆண்டுதோறும், சூப்பர் பவுர்ணமி நிலா நாள் வரும் போது, துாரம் குறைவாக இருப்பதால், நிலா சற்று அருகில் தெரியும். இந்த ஆண்டு மூன்று, சூப்பர் நிலா நாட்கள் உள்ளன. ஏப்ரலில், முதல் சூப்பர் நிலா தெரிந்தது. இரண்டாவது நாளாக இன்று தோன்றுகிறது. அடுத்த சூப்பர் நிலா, டிச., 14ல் தெரியும்.

இன்று தோன்றும் நிலா, பூமியிலிருந்து, மூன்று லட்சத்து, 56 ஆயிரத்து, 511 கி.மீ., துாரத்தில் வருகிறது. இது, வழக்கமான தன்மையை விட, 30 சதவீதம் அதிக ஒளியை உமிழும். இதை வெறுங்கண்ணால் பார்க்கலாம்; எவ்வித பாதிப்பும் ஏற்படாது.இவ்வாறு அவர் கூறினார்.'இதுபோன்ற சூப்பர் பவுர்ணமி நிலாவை, அடுத்ததாக, 2034ல் தான் பார்க்க முடியும்' என, சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசா தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank