மைக்ரோசாப்ட் - விண்டோஸ் 7, 8 விற்பனை நிறுத்தம்!
மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 9, 10 ஆகிய மென்பொருளின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விண்டோஸ்
7, 8 ஆகிய கணினி பயன்பாட்டு மென்பொருள் விற்பனையை நிறுத்துவதாகத் தெரிவித்துள்ளது.
கணினி பயன்பாட்டுக்கான மென்பொருள் தயாரிப்பில் மைக்ரோசாப்ட் நிறுவனம் முதன்மை வகித்து வருகிறது. உலகில் பெரும்பாலான கணினி
பயன்பாட்டாளர்கள் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 7, 8 மென்பொருளையே பயன்படுத்தி வருகின்றனர்.
காலத்துக்கு ஏற்றவகையில், அவ்வப்போது விண்டோஸ் மென்பொருளில் அப்டேட் வடிவத்தை மைக்ரோசாப்ட் புதிதாக வெளியிடுவது வழக்கம்.
தற்போது புதிதாக வடிவமைக்கும் விண்டோஸ் 11, 12 ஆகிய மென்பொருள் தயாரிப்பில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் சுமார் ஏழு ஆண்டு காலமாக பயன்பாட்டில் இருக்கும் விண்டோஸ் 7, 8 ஆகிய மென்பொருளின் விற்பனையை நிறுத்துவதாக, தெரிவித்துள்ளது. விண்டோஸ் 9, 10 போன்ற மென்பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் இம்முடிவை மேற்கொண்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
விண்டோஸ் 7, 8 விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, விண்டோஸ் 7 இயங்குதளத்துக்கு 2020 ஆம் ஆண்டு வரையும், விண்டோஸ் 8.1 இயங்குதளத்துக்கு 2023 வரையும் சேவை வழங்கப்படும் என்றும் அடுத்த ஆண்டில் விண்டோஸ் 10 மென்பொருளில் புதிய அப்டேட் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.