இனி நகை வாங்க பான்கார்டு கட்டாயம்: மத்திய வருவாய்த்துறை அதிரடி உத்தரவு
நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செவ்வாய்க்கிழமை (நவ.8) நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் மாற்றம் காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு புதன்கிழமை (நவ.9)
விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, பொதுமக்கள் அனைவரும் அத்தியாவாசிய செலவுகளுக்கு ரூ.100 நோட்டுகளை ஏடிஎம் மையங்களில் எடுக்க இரவு முழுவதும் கால் கடுக்க வரிசையில் நின்ற பொதுமக்கள், அன்று இரவே தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினர். இதனால் நகைக்கடைகளில் செவ்வாய்க்கிழமை இரவிலிருந்து வாங்க குவிந்தனர். இதனால் தங்கத்தின் விலை என்றும் இல்லாத அளவுக்கு ஏறுமுகமாக காணப்பட்டது. மேலும், நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.
இதையடுத்து நகைக்கடைகளுக்கு மத்திய வருவாய்த்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், நகைக்கடைகளில் நகை வாங்கும் அனைவருக்கும் பான் கார்டு விவரத்தை கட்டாயம் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.