தமிழக மருத்துவ பல்கலைக்கு இந்திய அளவில் முதலிடம்


           'இந்திய அளவில், தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கு முதலிடம் கிடைத்துள்ளது,'' என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் துணைவேந்த
ர் திலகர் பேசினார்.

         3வது இடம் : தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் வெள்ளி விழாவின் நிறைவு நிகழ்ச்சி, வேப்பேரி, சென்னை கால்நடை மருத்துவ கல்லுாரியில், நேற்று முன்தினம் நடந்தது.  
        அதில், பல்கலையின் துணைவேந்தர் திலகர் பேசியதாவது: கால்நடை மருத்துவம், கல்வி, ஆராய்ச்சி, நலன், சிகிச்சை, தொலைநிலைக்கல்வி உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் நோக்கில், இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துவங்கப்பட்டது. கடந்த, 2015ல், தேசிய அளவில், பல்கலையின் தரவரிசை ஆய்வு மதிப்பீட்டில், 36வது இடத்தையும், மாநில அளவில் மூன்றாவது இடத்தையும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகளின் தரவரிசையில், முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின், சர்தார் பட்டேல் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளது. பி.வி.எஸ்.சி., - ஏ.எச்.ஏ., ஆகியவற்றில், மின்னணு பாடங்களை துவக்கியதற்காக, சிறந்த செயல்பாட்டுக்கான விருதை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் வழங்கி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். 
பங்கேற்பு : நிகழ்ச்சியில், தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் வெள்ளி விழா மலரை, முன்னாள் துணை வேந்தர் ஞானப்பிரகாசம் வெளியிட்டார். தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர்களான பிரபாகரன், கதிர்வேல், பலராமன், தங்கராசு, பதிவாளர் மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)